இலக்கிய ஞானம் பிறந்தது

போதி மரத்தடியில் புத்தன் அமர்ந்தான்
ஞானம் பிறந்தது
போதி மரத்தடியில் நானும் அமர்ந்தேன்
நீயும் வந்தாய் அருகில் அமர்ந்தாய்
மென்மலர்விழிகளால் என்னை ஸ்பரிசித்தாய்
புன்னகை புத்தகம் திறந்து போதியில் போதித்தாய்
கவிதை எழுத இலக்கிய ஞானம் பிறந்தது !

எழுதியவர் : கவின் சாரலன் (11-May-21, 10:27 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 27

மேலே