கொட்டும் தேளிலும்
கொட்டும் தேளிலும்
கொட்டும் தேளிலும்
விடமானது
கொட்டும் சொல்
வெட்டும் கோடாலியிலும்
மோசமானது உனது கரம்
பட்டு எரிப்பது நெருப்பு
படாமல் எரிப்பது பார்வை
சுட்டால் பொசுக்குவது நெருப்பு
சுடாமல் பொசுக்குவது உனது சினம்
விட்டால் சிதறுவது எண்ணை
விடாமல் சிதறுவது
முன்கோபம்
பட்டால் தெரிவது வதை
படாமல் தெரிவது உவாதை
ஊனத்திலும் கொடியது
மௌனம்
ஆசைப்படுவதில் இல்லை வேசம்
அவதிப்படுவதில் உண்டு நாசம்
உறங்கிவிடாதே
உலகம் உன்னை
ஊமையாக்கிவிடும்
ஊசியைவிட உள்மனது வரை சென்று குத்துவது
உன் சொல்அலைச்சல் இருந்தால் கொடைச்சல் வரும்
அவதி பட்டால்
மன உலைச்சல் வரும்
ஆசை நிறைவேறுவதும் இல்லை
அலைச்சல் நிற்பதும் இல்லை
கனவு நிஜமாகலாம்
நிஜம் கனவாகக் கூடாது
கட்டழகை காணும்போது கவனம் கவலை அழிப்பதைவிட
கட்டழகு(கி)அழித்துவிடும்
கடன் வாங்க முடியாதது கவலை
கழண்டு போகாததும் கவலை
கட்டியணைக்கத் துடிப்பது கவலை
உழண்டு கிடந்தாலும்
உடலோடு போவது கவலை
நிழலாய் தொடர்வது கவலை
நீ நினைத்தாலும்
உதிரும் (உதிராதது) கவலை
இகழ்பவன்
புகழ்வது பெறுமை
புகழ்வன் இகழ்வது
கொடுமை
வியர்வையில் கலையாதது
உழைப்பு
விறு விறு என்று பிடிப்பது உணர்வு
விட்டுப்போவது உயிரு
பிரச்சனையே
பிரச்சனையானால்
அந்தப் பிரச்சனையே
பிரச்சனையாகிவிடும்
பிடிகொடுக்காது நம்முடன் தங்கிவிடும்
பிடிவாதம் ஒரு வாதம்
பிடித்தவனை விடாது
புன்னகை பூக்கலாம்
அது யாரையும் புண்படுத்தக் கூடாது.
அது புண் நகையாகிவிடும்
பொய்யும் மெய்யாகும்
போக்கத்தவன் வாயில்
கடவுள் காப்பாற்றுவான் என்பதைவிட
நேரத்தை காப்பாற்ற கற்றுக்கொள்
முந்தி வருவது சினம்
மந்தி புத்தி கொண்டது
மனம்
உந்தி போகக் கூடியது
உன்னுடன் குந்தியே
குடைவதும் மனம்
இகழ்ந்தால் பதுங்காதே
புகழ்ந்தால் மயங்காதே
பயணித்துப்பார்
பயணம் என்ன வென்று தெரியும்
புலம்பலில் இல்லை வெற்றி
புழுங்குவதில் இல்லை புகழ்ச்சி
புழுகுவதில் இல்லை புரட்சி
பதுங்குவதில் இல்லை
மலர்ச்சி
சிரித்தக்கொண்டே இருந்தால் வலிகள் கூட விலகிவிடும்
அறிவாய் பேசுவதைவிட
பரிவாய் பேசு
பாசம் எடுக்கும்
சிந்தித்துப்பார்
சீற்றமும் அடங்கும்
நட்பு
உப்பாய்க் கரிக்கக்
கூடாது
தேடலையும்
தேவையையும் தேடித்தான் பிடிக்க வேண்டும்
அறிந்ததை உரைப்பதே அறிவுரை
அறியாத உரையாய் இருந்தால்
ஆத்திரம் தான் வரும்
நம்பி (க்) கை வை
அதுதான் நம்பிக்கை
அவா (ஆசை) இல்லாத நம்பிக்கை
அவநம்பிக்கை
இனிப்போ கசப்போ
தொண்டை வரைதான்
இன்பமும் துன்பமும்
தொடர்வது வரைதான்
இலட்சியம் அவனுள் வருவது
அலட்சியம் அவனால் வருவது
இறக்கமும் ஏற்றமும்
ஈசன் கையில் இல்லை
இருந்து சாதிக்கும் உன் கையில் உண்டு
சுய நலம்
சும்மா இருப்பதில்லை
பொது நலம்
பொய்யுரைக்காமல்
இருப்பதில்லை
பொய்க்காத சுயநலம்
போகாமல் இருப்பதும் இல்லை
குறிக்கோள் இல்லாத மனது
குப்பை மேடுதான்
பழையது பழையது என்று பதட்டப்படாதே
பழம் அது பழம் அது
என்று
பலத்தைத் தேடு
புத்தியைத்தீட்டு
புதியது பூக்கும்
புதுமை நடக்கும்
எதிர்காலம் நேரத்திற்குள்
புதைவது இல்லை
புதையலாய்த்தேடு
எதிர்காலம்
இருட்டாகாது.
எட்டிப்பார்த்;து ஏந்திவரும்
பொறுமையில் உண்டு பெறுமை
பொறுமையில் இல்லை தோல்வி
பொறாமையில் இல்லை வெற்றி
இருன்ட வானில் தான்
நிலவு பூக்கும்
மிரண்டு போகாதே
மிதந்து கிடக்காதே
அசாத்திய வெற்றி
அறிவால்தான் கிட்டும்
தேதியைக் கழிப்பதுபோல்
கவலைகளை
கிழித்து எறி
கட்டாயம் கிட்டும் வெற்றி
கடிந்து செயல்படாதே
கடந்து செயல்படு
முடியாது முடியாது என்று
முடங்கிக் கிடந்தால்
வெற்றி கிட்டாது
புரியாதது வரை வாழ்க்கை புதிர்தான்
புரிந்துவிட்டால்
வாழ்க்கை புகழ்தான்
பொய்யின் வேகம் புயலாய் அடித்துச் செல்லும்
மெய்யின் வேகம்
மெல்லத்தான் போகும்
உபதேசம் உவர்ப்பானால்
உதவாது
கனைக்காத குதிரை ஓடாது
குரைக்காத நாய் கடிக்காது விடாது
உதைக்காத கழுதை சுமக்காது
நாம் சிரிக்கலாம் நம்மைப்பார்த்து பிறர் சிரிக்கக் கூடாது
வயலுக்குத் தேவை உரம்
வாழ்க்கைக்கத் தேவை ஓட்டம்
உடுத்தாத சட்டை உதவாது
உலராத சொல்
உருப்படாது
உனக்காக வாழ்ந்தால்
உலகம் தலைக்காது
அ. முத்தவேப்பன்