கை விளக்கேந்திய காரிகை

ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்
இத்தாலியில் ப்ளாரன்ஸ் நகரிலே
பிறந்த செல்வசீமாட்டி நீ
பதின்ம வயதினிலே செவிலியர் பணியே இறைபணி என தேர்ந்தெடுத்தாய்
பதினேழு வயதினிலே திருமணத்தை
நிராகரித்து ஜெர்மனியில் செவிலியர்
பயிற்சி பெற்றாய்
காலரா நோய் காலத்தில்
கடுமையாக பணிபுரிந்து நோயுற்றாய்
ரஸ்யபோர் மூண்டிடவே வீரர்களுக்கு
பணியாற்ற சென்றாய்
உன் தன்னலம் பாரா சேவையை தொடர்ந்தாய்
இரவினிலே கைவிளக்கேந்தி காயம் பட்ட
வீரர்களுக்கு சேவை செய்திட்டாய்
கைவிளக்கேந்திய காரிகை என
பேர் பெற்றாய்
நைட்டிங்கேல் செவிலியர் பயிற்சி
பள்ளியை நிறுவி பயிற்சியை முறைமைபடுத்தினாய்
பாரதத்தில் உனது சேவையை தொடர்ந்திட்டாய்
தள்ளாத வயதினிலும் தடைகளை
பாராது பணி செய்தாய்
தொண்ணூறு வயதினிலே இறைவனடி
சேர்ந்திட்டாய்
தோன்றின் புகழோடு தோன்றுக
என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்தாய்
உன் நினைவாய்
நீ பிறந்ததினம்செவிலியர் தினமாய்
திகழ்கிறது
அன்று நீ ஏற்றிய தீபமது
இன்றும் கொரோனா நோய் காலத்தில்
செவிலியர்கள் தன்னலம் பாரா சேவையில் ஒளிர்கிறது
உன் வழியினிலே...

எழுதியவர் : ஜோதிமோகன் (12-May-21, 1:10 pm)
சேர்த்தது : ஜோதிமோகன்
பார்வை : 85

மேலே