முத்தங்கள் ஆயிரம் தந்து

காகிதப் பூ வீசுமோ வாசம்
கானல் நீர் தீர்க்குமோ தாகம்
தென்னையில் கிடைக்குமோ பழம்

மணல் இல்லா ஆறு சுரக்குமோ
மழையில்லா பயிர்கள் செழிக்குமோ
தழையில்லா மரமும் வாழுமோ

காகமும் வெட்கத்தால் சிவக்குமோ
காண்டீபம் எய்யா அம்பு துளைக்குமோ
கருக்காமல் மேகமும் பொழியுமோ

ஆசையில்லாது அன்பு உதிக்குமோ
ஆவல் கொள்ளாது காமம் தழைக்குமோ
விழிகள் சந்திக்காது காதல் பிறக்குமோ

தாழம்பூ நிறத்துத் தாரகையே
தத்தளிக்கும் வகையில் காதல் கொண்டேனடி
சித்தம் குளிர பதில் வார்த்தை சொன்னால்

முத்தங்கள் ஆயிரம் தந்து உன்னை
தங்கநிற முத்துப் போலே காத்தவாறு
தரணியில் புதுக் காதல் வாழ்க்கை வாழலாமே.
-----நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (13-May-21, 10:49 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 334

மேலே