எப்போது காதல் சொல்வாய்

நிழலாய் வருபவனே!
தினம் தினம் என்னை பின்தொடர்பவனே!
கண்முன்னே தினமும் காட்சி தருபவனே!
மனதில் நுழைந்தவனே!
மதியில் கலந்தவனே!
கனவில் வருபவனே!
கவிதை படிப்பவனே!
நிலவாய் வந்து என் நித்திரையை பறிக்கிறாய்!
இமைக்குள் இருந்து என்னை இயங்க விடாமல் செய்கிறாய்!
நீளும் இரவுபொழுது நித்தம் நித்தம் உன் நினைவில் கரைகிறது!
நட்சத்திரங்களை எண்ணி பார்க்கிறேன்!
மாலை சூட்டும்
நாள் ஒன்றை எதிர்பார்க்கிறேன்!
காலங்களை கடத்தாமல் காதோடு வந்து காதல் சொல்லிடு

என் ஆசை காதலனே!

எழுதியவர் : சுதாவி (14-May-21, 8:48 am)
சேர்த்தது : சுதாவி
பார்வை : 256

மேலே