பூப்பறிக்க நீ வரும் காலைப் பொழுதுதான்

பூவுக்கு வாசம் உண்டு
-----வாசமில்லா பூக்களும் உண்டு
தோப்பில் மா பலா கொய்யா காய்கனி உண்டு
-----காய் கனி இல்லா இலைத் தோட்டமும் உண்டு
யாப்பில் எழுதுவதே கவிதை என்பது உண்டு
-------இலக்கணமில்லா கவிதைகளும் கணினியில் உண்டு
பூவும் தேனும் தென்றலில் ஆடிட முப்பொழுதுகள் உண்டு
------பூப்பறிக்க நீ வரும் காலைப் பொழுதுதான் எனக்கு உண்டு !

எழுதியவர் : கவின் சாரலன் (14-May-21, 9:27 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே