கொஞ்சும் பொழிலாய் அவள்

பாவை அவளின் விழிப்பார்வை தெளிக்கும் பன்னீர்துளிகள்

கோதை அவளின் கேசம்வீசம் வாசம் தருமே புதுநேசம்

இதயநாயகியின் இதழ்கள் தேனில்ஊறிய குல்கந்து

பளிங்காய் மினுக்கும் அவளின் கழுத்து பாக்கு மரம்

பிறைநெற்றிகாரி யின் புருவமிரண்டும்
செங்கரும்பின் வளைவு

கன்னமிரண்டும் கடிக்காத மாம்பழம்
பல்வரிசையெல்லாம் பருவத்தே சீராய்

மொத்தத்தில் என்சப்தத்தையும் (ஏழு) முழுதாய் நிசப்தமாக்கிய ...

எழில் கொஞ்சும் பொழிலாய் அவள்.
ஏக்கம் யெனைகெஞ்சும் மிடுக்காய் அவள்.

எழுதியவர் : பாளை பாண்டி (14-May-21, 1:29 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 305

மேலே