பிரிவாலும் பிரிக்க முடியாது

பெண்ணே!
உனக்காக
வாழ்ந்து கொண்டிருக்கும்
என்னை விட்டு
நீ யாருக்காக வாழப் போனாய்?

உன்னுடைய இழப்பு
ஈடு செய்ய முடியாத ஒன்று....

உன் கொலுசைப் போல்
என்னுடைய மனமும்
உன்னுடைய காலையே
சுற்றிக் கொண்டுள்ளது....

உன் இதயம் என்ன
கரும்பலகையா?
அழித்து அழித்து எழுதுவதற்கு...
நீ கொடுத்து வைத்தவள்...

உன்னோடு
வாழ்ந்த போது
அனுபவித்த இன்பத்தை போல்...
உன்னுடைய
பிரிவுக்குப் பின்
அனுபவிக்கும் துன்பத்தை போல்
யாரும்
அனுபவித்திருக்க மாட்டார்கள்..

இதயத்தை திருடியது தப்புதான்
அதற்காக
இவ்வுலகத்தையே சிறையைாக்கி
அதில் என்னையே!
ஆயுள் கைதியாக்கி
அடைத்து வைத்து விட்டாயே!
தண்டனை கொஞ்சம் அதிகம் தான்

இருவரும்
ஒரு ஜோடி
செருப்பாக இருந்தோம்
ஒன்று நீ
எதிர்பாராமல்
தொலைந்துவிட்டாய்
இன்னொன்று நான்
தானாகவே தொலைந்த விடுவேன்...!

கவிதை ரசிகன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (14-May-21, 7:27 pm)
பார்வை : 148

மேலே