தழுவியேக் கிடந்தேன்

நேரிசை வெண்பா

அரவிரண்டு சாரையிணை கட்டிலில் பின்னிக்
கரவாத் தழுவி அவரை -- புரள
அரண்டு மெலிந்தேன் பசலை படர
மிரண்டு புரளா கிடந்து


நானும் அவரும் இரண்டு சாரை பாம்புகளென ஒருவரை
ஒருவர் பின்னித் தழுவிக் இன்பம் துய்த்தோம்.. அந்நேரம் நான்
சிறிது புரண்டு படுத்தாலும் பிரிவு தாங்கா பசலைத் துயர் சூழ
மெலிந்து துவண்டேன். ஆதலால் பின்னியேக் கிடந்தேன்.

குறள் 7/ 11

எழுதியவர் : பழனி ராஜன் (15-May-21, 5:42 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 153

மேலே