வாய்க்காலில் நீராடும்

வாய்க்காலில் நீராடும் வசந்த வல்லி
வாய்குவித்து கொப்புளிக்கும் புன்னகை வல்லி
வாய்க்கால் வாத்து மீனைக்கொத்தி நீந்திவந்து
வாய்க்கால் மேனியெழிலுக்கு அழகுப்பரிசு தந்தது !

வாய்க்கால் கரையோரம் இளனியருந்தும் மாமன்
வாய்க்கால் வாத்து தந்தமீன்பரிசில் மகிழ்ந்து
வாய்க்கு ருசியாய்இன்று மீன்குழம்பு என்றமகிழ்ச்சியில்
வாய்எல்லாம் பல்லாய் வள்ளிவள்ளிஎன்று துள்ளிநடந்தான்

---பா வ க வி

எழுதியவர் : கவின் சாரலன் (15-May-21, 10:00 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே