விழித்திடுவீர்

மக்களே மக்களே விழித்திடுவீர்
முகத்தில் கவசம் அணிந்திடுவீர்
பக்கத்தில் நிற்பதைத் தவிர்த்திடுவீர்
பரவும் தொற்றினைத் தடுத்திடுவீர்.

வெளியில் செல்வதைக் குறைத்திடுவீர்
வீட்டில் இருந்திடப் பழகிடுவீர்
அழிக்கும் நோயினை விரட்டிடுவீர்
அகிலம் பிழைக்க நினைத்திடுவீர் .

கைகளை அடிக்கடி கழுவிடுவீர்
கடமை அதுவென கொண்டிடுவீர்
பொய்களைப் பரப்பிடத் துடிக்காதீர்
பாவம் அதுவென எண்ணிடுவீர் .

தடுப்பு ஊசிகள் போட்டிடுவீர்
தொற்றும் நோயினைத் துரத்திடுவீர்
அடுத்தவர் நலனையும் பேணிடுவீர்
அல்லல் வருவதைத் தடுத்திடுவீர் .

கூடிக் களிப்பதைத் தவிர்த்திடுவீர்
குடும்பம் இருப்பதை நினைத்திடுவீர்
நாடு நலம்பெற உழைத்தடுவீர்
வேதனை வருவதை உணர்ந்திடுவீர் .

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (17-May-21, 5:54 pm)
பார்வை : 74

மேலே