எதுகையும் மோனையும் இல்லாத பா,பாழ் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

எதுகையும் மோனையும் இல்லாத பா,பாழ்;
அதிசயம் நன்றென ஆங்கே – சதுராகப்
போற்றிடும் வாக்கில் பொழிப்புமோ னைய்,யுமே
சாற்று(ம்)வகை யானால் சரி!

- வ.க.கன்னியப்பன்

அடிமோனை மட்டுமின்றி பொழிப்பு மோனையும் அமைத்தால் பாடல்கள் சிறக்கும்.

வெண்பா, கலிவிருத்தம் - 1. 3 சீர்களில்

கலித்துறை - 1. 3, 5 சீர்களில்

அறுசீர் விருத்தம்:

விளம் மா தேமா அரையடிக்கு - 1. 4 சீர்களில்

மா மா காய் அரையடிக்கு - 1. 4 சீர்களில்

காய் 4 மா தேமா - 1. 5 சீர்களில்

எழுசீர் விருத்தம்:

விளம் மா விளம் மா / விளம் விளம் மா - 1. 5 சீர்களில்

எண்சீர் விருத்தம்:
காய் காய் மா தேமா அரையடிக்கு

1. 3, 5, 7 சீர்களில்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-May-21, 10:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே