எழுந்து வா இளைஞனே!

👍👍👍👍👍👍👍👍👍👍👍

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

👍👍👍👍👍👍👍👍👍👍👍

இளைஞனே!
சாதித்தவர்கள்
போதித்ததை
கேட்பதோடு
போய் விடுகிறாய் ...
ஒரு முறையாவது
உன்னை சோதித்துப்
பார்த்திருக்கிறாயா...?

இனியாவது
சோதித்துப் பார்......

உன்னுடைய கற்பனைக்குள்ளும்
இன்னொரு
கம்பன் இருக்கலாம்.....

உன்னுடைய வார்த்தைக்குள்ளும் இன்னொரு
அறிஞர் அண்ணா
இருக்கலாம்....

உன்னுடைய கருணைக்குள்ளும்
இன்னொரு
காமராஜர் இருக்கணும்....

உன்னுடைய கல்விக்குள்ளும்
இன்னொரு
அம்பேத்கார் இருக்கலாம்....

உன்னுடைய தியாகத்திற்குள்ளும்
இன்னொரு
கொடிகாத்த குமரன்
இருக்கலாம்......

உன்ன்னுடை வீரத்திற்குள்ளும்
இன்னொரு
நேதாஜி இருக்கலாம்....

உன்னுடைய ஒழுக்கத்திற்குள்ளும்
இன்னொரு
விவேகானந்தர் இருக்கலாம்....

உன்னுடைய அறிவுக்குள்ளும்
இன்னொரு
அப்துல்கலாம் இருக்கலாம்.....

யார் அறிவார்கள்....?
இனியும்
காலம் தாமதம்
வேண்டாம்....

உன்னை
சோதிக்க தொடங்கிவிடு.....
எவன் ஒருவன்
தன்னை
சோதனைக்கு
உட்படுத்துகின்றனோ !
அவனே
சாதனைக்கு
உயிர் கொடுக்கின்றான்....!

இளைஞனே !
நீ சாகப் பிறந்தவனல்ல.
சாதிக்கப் பிறந்தவன்.....
எழுந்து வா இளைஞனே....!

*கவிதை ரசிகன்*
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

எழுதியவர் : கவிதை ரசிகன் (18-May-21, 6:57 pm)
பார்வை : 54

மேலே