நிலைக்கு முலகில் நிலவுகின்ற வைம்பூதம் - வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
நிலைக்கு முலகில் நிலவுகின்ற வைம்பூதம்
நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்;
அலைக்கின்ற வாழ்வினில் ஆக்கிடும் தாக்கம்
கலக்கம் மிகாதெமைக் காத்திட வேண்டுமே!
- வ.க.கன்னியப்பன்