பூவிதழ் மெல்லத் திறந்து புன்னகை பூக்கிறாய்

பூநிறைந்த கூடையோ புன்னகை தவழும் இதழ்கள்
பூவிரிந்து மெல்லத் திறக்கும் வண்ண எழில்போல்
பூநிகர் பாவரையும் கவிஞன் செந்தமிழ்ச் சொல்போல்
பூவிதழ் மெல்லத் திறந்து புன்னகை பூக்கிறாய் !

----ஐஞ்சீர் நெடிலடியால் கலித்துறையில்
புன்னகையில் நடக்கும் செந்தமிழ்ப்பாவை

எழுதியவர் : கவின் சாரலன் (26-May-21, 9:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே