இருஇதயங்கள்

பால்வண்ண நிறம் கொண்டு
உன்னைப் படைத்தவன் யாரடி?
கருந்திராட்சைப் பழங்கள் கொண்டு
உன் கருவிழிகளில் வட்டம்
வரைந்தது யாரடி?

பிறைநுதழ் பிடுங்கி வந்து
உன் நெற்றியில் பொருத்தி
வைத்தது யாரடி?
மேகங்களை கட்டியிழுத்து
உனக்குக் கூந்தல் செய்தது யாரடி?

எள்ளுப்பூநாசியும்
தேன் சிந்தும் உதடுகளும்
உனக்கு செய்து வைத்தது யாரடி?

அவன் பேர்தான் பிரம்மனோ!
உன்னை செதுக்கிய சிற்பியோ!
அவனிடம் சென்று கேள்!
உனக்கு இரு இதயங்கள்
வேண்டுமென்று,
உன் இதயம் அருகிலேயே
என் இதயமும் இருக்க....

!

எழுதியவர் : ரோகிணி (28-May-21, 3:36 pm)
பார்வை : 535

மேலே