இனியவது யோசி....
ஒவ்வொருவருடைய
வாழ்விலும்
எதிர்பாராமல் வருவது.....
பொருள் இழப்பு
பணம் இழப்பு
வெற்றி இழப்பு
தொழில் இழப்பு
உடல் உறுப்பு இழப்பு
உயிரிழப்பு
இவைகளில்....
உயிரிழப்பு மட்டுமே
திரும்பப் பெறமுடியாது
மற்றவையெல்லாம்......
விடா முயற்சியாலும்...
அயராத உழைப்பாலும்...
விட்டுக்கொடுப்பதாலும்...
பொறுப்பான சேமிப்பாலும்
நிச்சயம் திரும்ப் பெறலாம்...
மனிதனினால்
திரும்பப் பெற முடியாது என்று நினைத்த
உடல் உறுப்புகளைக் கூட
செயற்கை முறையில் பெற்றுவிட்டோம் .....!
அப்படி இருக்கும் போது.....
பணம் போய்விட்டது என்று
நடமாடும் பிணமாக வாழ்கின்றனர்.... உறவுமுறை போய்விட்டது என்று உருக்குலைந்து வாழ்கின்றனர்....
வெற்றி போய்விட்டது என்று
மூலையில் முடங்கி வாழ்கின்றனர்....
பொருள் போய்விட்டது என்று வாழ்வில்
பொருள் இல்லாமல் வாழ்கின்றனர்...
உடல் உறுப்பு போய்விட்டது என்று மனமுடைந்து வாழ்கின்றனர்
தொழில் போய்விட்டது
தொழிலில் நஷ்டம் வந்து விட்டது
என்று குடும்பத்தோடு
சுடுகாட்டிற்கு போய்விடுகின்றனர்.....!
மனிதர்களே!
இனிப்பு சுவை
நன்றாகத்தான் இருக்கும்
இருப்பினும்
தொடர்ந்து
சாப்பிட்டுக் கொண்டே இருந்தால்
ஒரு சலிப்பு
வந்து விடுகிறது அல்லவா...?
படுத்திருப்பது சுகமாகத்தான் இருக்கும்
இருப்பினும் தொடர்ந்து
படுத்தக் கொண்டே இருந்தால்
உடல் வலி உண்டாகி
சுமையாகி விடுகிறது அல்லவா...?
அது போலத்தான்....
வாழ்வில்
தொடர்ந்து இன்பம் மகிழ்ச்சி வெற்றி மட்டுமே இருந்து விட்டால்
வாழ்க்கை சலி த்து விடும் .....
அதனால் தான்
இடையில்
துன்பம் கஷ்டம் தோல்வி
எல்லாம் இறைவன் படைத்தான்...
துன்பம் கஷ்டம் தோல்விகள்
வரும் போதெல்லாம்
அதனை
சவாலாக
எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர சாவதற்கு விஷத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது.....
தோல்வியே
வெற்றிக்கு முதல் படி....
தட்டுங்கள் திறக்கப்படும்....
தேடுங்கள் கிடைக்கும்....
தோற்பது தோல்வியல்ல
தோற்றே கிடப்பதுதான் தோல்வி...
வீழ்வது வீழ்ச்சியல்ல
வீழ்ந்தே கிடப்பது தான் வீழ்ச்சி.... இதனை வாசித்திருக்கிறாய்
என்றாவது யோசித்து இருக்கிறாயா?
இனியாவது யோசி....!
கவிதை ரசிகன்