ஆதிமொழித் தமிழே

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

உரவோர் செறிந்து பெரியதோர் குழுவாய் தமிழால் கூடியே
தரகர் எனவே அயன்மொழி பேசுவோர் புன்மையால் தமிழை
பரதர் குலத்தின் முதலென அரசன் கயலின் கொடியால்
விரதம் கொண்டே சழக்கையும் ஓர்ந்திட அமைத்தான் அங்கண் ----- 1

இலக்கண நூல்களை எழுதிட ஊக்கமும் பொன்னும் அளித்தே
பலக்குழு தோன்றிட செழிப்பர் அலந்தவர் எனவே பலரை
கலக்கியே சேர்த்து நண்ணுதல் முறையில் ஆக்கினான் பிணைத்து
உலகினில் ஆதியின் மொழியாம் தமிழென ஓவமாய் உரைத்தர். ----- 2

கூகையாய் கூவிய அயல்மொழி பேசுவோர் குறுகி நாணினர்
தோகையை பிய்ந்த ஞமலி போலவே மழையின் உமணராய்
ஓகையால் மிகுந்த அறிஞர் இளந்தமிழ் நூலையும் முழையில்
பாகையால் போர்த்தி கவுளும் செழிக்கும் வகையில் காத்தனர். ----- 3
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (30-May-21, 12:44 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 36

மேலே