சிகரெட்

வெண்ணிற ஆடையணிந்தவளே!
அக்கினி பிரவேசம் செய்து
நீ போதையை தருகின்றாய்
உன்னை தீக்குளிக்க செய்வதால் புகைப்பவர்கள் நுரையீரலை
நீ பொசுக்குகிறாயோ?
நிமிட நேர சுகமளித்து
நீங்காத இன்னலை தண்டனையாக
அளிக்கின்றாயே? ஆயினும்
மானிடரிங்கே உனக்கு
அடிமையாகின்றனரே?


ஜோதிமோகன்
புதூர்

எழுதியவர் : ஜோதிமோகன் (1-Jun-21, 9:04 pm)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : sikaret
பார்வை : 156

மேலே