ஒற்றைப்பூ

ஒற்றைப்பூ

ஒற்றைப்பூ,
உறங்காது கண்விழித்த ஒற்றைப்பூ;
தள்ளியே நிற்கும் ஒற்றைப்பூ;
தனிமையில் துணை தேடும் ஒற்றைப்பூ;
பக்கத்தில் துணையில்லாது,
பூத்த ஒற்றைப்பூ.

தனியாய் மலர்ந்து,
அநாதையானது இந்த ஒற்றைப்பூ.

பார்த்து ரசிக்காத,
பரிக்காத பூதான்,
பரிதாபப் பட யாரும் இல்லைதான்;
பொழுது புலர்ந்ததும் தெரியாது,
மலர்ந்து கிடக்குது,
புலம்பித்தவிக்கும் மந்தாரைப்பூ.

ஆம் அந்தப்பூ,
எங்கள் வீட்டில் கம்பி யோரம் பூத்த,
ஒத்தை அந்திமந்தாரைப் பூ.

அழகை சிறைசெய்த பூ,
அணைத்து ஆறுதல் சொல்ல,
கம்பிகலே துணை.

ஆற்றாது தலையை எட்டிப்பார்க்கும்,
இந்த தவிப்பு.
வியப்பல்ல! வியப்பல்ல !
தனிக்குடும்பத்தின் தவிப்பு!
இன்று வீடுதோரும்,
வந்தே தனியே பூத்த
தனிமை என்னும் தினிப்பு.

எழுதியவர் : ஒற்றைப்பூ (3-Jun-21, 9:50 am)
பார்வை : 27

மேலே