சுதந்திர தாகம்

தாயின் கருவினில் பிறந்தோமே,
இந்நாட்டின் சிறையினில் உதிர்ந்தோமே,
பறைவகளாய் பிறந்திருந்தால் பறந்திருப்போம் சுதந்திரமாய்,
பெண் பாவிகளாய் பிறந்ததினாள் மண்ணில் படுத்து விட்டோம் நிரந்தரமாய்,
வாழ்வதற்கே கருதறித்தோம் கருவறையில், கயவர்கள் பசிக்கு உணவாகி கதறுகிறோம் கல்லறையில், கண்ணெதிரே கற்பழிப்பை கண்டு கொண்டோம்,
இனி வாழ்ந்தும் பயணில்லை என்று தெரிந்து கொண்டோம்,
மானத்தை இழந்து விட்டோம் அவமானத்தை சுமந்து விட்டோம்,
அரக்கர்களின் வெறியாட்டம் எங்களிடம் இருப்பதோ உயிர் மட்டும்,
பிறந்து விட்டோம் பெண்கள் எனும் அடிமைகளாய்,
வாழ்கிறோம் இம்மண்ணில் விதவைகளாய்,
ஆதரிக்க யாருமில்லை எங்கே ஆதரவு கேட்பதென்றே தெரியவில்லை,
பெண்களாக பிறந்ததற்கு தண்டனையாய் இம்மண்ணில் நிம்மதியாய் வாழ ஒரு நாதியில்லை,
சடலங்களாய் கிடக்கின்றோம் உயிரூட்ட யாருமில்லை,
உயிர் வேறா? உரிமை வேறா? இரண்டும் வேறென்றால் நாம் மனிதர்களா? குரங்கு பறித்த வீணையை நாம் கேட்டா பெறுவது கொதித்தெழு பெண்ணே உறிந்து விடு இச்சுதந்திரத்தை.

எழுதியவர் : தமிழ் உதயன் (4-Jun-21, 12:37 pm)
Tanglish : suthanthira thaagam
பார்வை : 103

மேலே