நிலவும்-அவளும்

நிலவே நீ முழு நிலவாய்
நீலவானில் மிதந்து வரும் கோலம்
பார்ப்போருக்கு பரவசமூட்டும் ஆயின் நீ
அரை நிலவாய்த் தேய்ந்து பிறைநிலைவாய்
வரும்போது உனக்கேன் இந்த கதியோ
என்று தோன்றும் எப்போது நிலவே
உன்சாபம் நீங்கி முழுநிலவாய் எப்போதும்
விண்ணில் வலம்வருவாயோ என்றேன் அதற்கு
நிலவு சொன்னது' பெண்ணே இதோ
என்முன் காணும் வடிவழகி நீ
இப்படியே பருவம் மாறாது என்று
மண்ணில் வள வருவாயோ அன்று' என்றது
வாய் அடைத்து போனேன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Jun-21, 7:07 pm)
பார்வை : 164

மேலே