கண்கள் இருண்டால்

கண்கள் இருண்டால்!!!
பக்கம் : 2
விசிட்டிங் கார்டு யை பார்த்த அந்த தம்பதியர் வியந்து நின்றார்கள்..அதற்கு ஒற்றை காரணம் அந்த மருத்துவமனையின் பெயர் தான். சாதாரணமான பணக்காரர்களால் கூட அங்கே வைத்தியம் பார்க்க முடியாது என்பது எதார்த்தம் . அவ்வளவு அதிகமான மருத்துவ கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் ..
பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்களும் ,அரசியல்வாதிகளும் சிகிச்சைக்காக வந்து போகும் மிகப்பெரிய மருத்துவமனை தான் அபிலோ மருத்துவமனை . அது தவிர்த்து அவர்கள் வியக்க இன்னொரு காரணமும் உண்டு . அது டாக்டர் சரணவனின் பெயரும் தான் .
அந்த மருத்துவமனைக்கு வருபவர்களின் 10 இல் 7 பேர் டாக்டர் சரவணனுக்காக தான் அங்கே வருவார்கள் .எத்தனையோ டாக்டர் களால் காப்பாற்ற முடியாது
என்று சொன்னவர்களில் இன்று சிலர் வாழ காரணம் டாக்டர் சரவணன் தான் .60 வயதை தாண்டியும் இன்னும் அந்த சேவையை தொடர்ந்து கொண்டு இருக்கிறார் . மத்திய ,மாநில அரசுகளினால் விருது பெற்றவர் . அரசு மருத்துவ கல்லூரில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றுபவர் என்று அவரை பற்றி சொல்லி கொண்டே போகலாம் .
தம்பி ,"நீங்க அங்கையா டாக்டரா இருக்கீங்க ?" என்றார் சங்கர் ..
" இல்லைங்க ,,டாக்டர் சரவணன் எனது பேராசிரியர் .
கல்லூரி முடிந்ததும் மதியத்துக்கு மேல அவரு கூட தான் இருப்பேன். நீங்க வாங்க டாக்டர் கிட்ட நான் பேசுறேன் . நிச்சயமா ஏதாவது ஒரு வகைல உதவி செய்வார் .பணத்தை பத்தி கவலை படாதீங்க " என்றான் ரித்திக் ..
அவன் அப்படி சொல்ல காரணம் டாக்டர் சரவணனின் நன்மதிப்பை பெற்றவர்களில் ரதிக்கும் ஒருவன் .அநேகமா அது அவன் ஒருவன் மட்டும் தான் என்று பலரும் சொல்வதுண்டு .
மீண்டும் ஒலித்தது ரித்திக் போன் .கையில் எடுத்துக்கொண்டு கதவ்ஓரம்
நகர்ந்தான் . அது பவித்திரா தான்
" எங்க இருக்க இப்ப ?"
" நான் வந்து கிட்டு இருக்கேன் ..காலையில காலேஜ் ல பாப்போம்.."
" சரி எப்ப வருவ ?"
" 10 மணிக்கு சரணனன் சார் ய பாத்துட்டு ..11 மணிக்கு நாம எப்பவும் மீட் பண்ணுற இடத்துக்கு "
" உனக்கும் அவருக்கும் வேற வேலை இல்லை ..சரி எப்படியோ வந்து தொலை..அப்புறம் இவ்வளவு நாளா ஏன் போன் எடுக்கல..ஒரு மெசேஜ் கூட பண்ணல "
" அதுவா நான் ஹாஸ்பிடல் ல இருந்தேன் "
" ஏன் என்னாச்சு ?" என்று அவள் பதற
" ஐயோ உளறிட்டோமே !!" என்று பல்லை கடித்தான் ..
" ஹே போன் சார்ஜ் இல்லை ..நான் நேரா வந்து சொல்லுறேன் " என்று போன் வைத்தான் ரித்திக் ..
நாம் இருவரை தவிர இது யாருக்கும் தெரிய கூடாது .தெரிந்தால் இருவரும் உயிரோட இருக்கமாட்டோம் என டாக்டர் சரவணன் சொன்னது நினைவுக்கு வந்தது .
இருக்கை திரும்பி வந்து அந்த பிரேதபரிசோதனை அறிக்கைகளை ஒவ்வொன்றாய் எடுத்து பார்த்து கொண்டு இருந்தான் .அனைவரும் உறங்கி கொண்டு இருந்தனர் .. ஆம் இன்னும் 2 மணி நேரத்தில் சென்னை வந்து விடும் ..
(கண்கள் திறக்கும் பக்கம் 3 ஆக)

எழுதியவர் : சசி குமார் (6-Jun-21, 1:21 pm)
சேர்த்தது : சசி குமார்
பார்வை : 88

மேலே