கண்கள் இருண்டால்

கண்கள் இருண்டால்!!!
பக்கம் : 4
பிரேதபரிசோதனை அறிக்கையோடு அபிலோ மருத்துவமனை உள்ளே ரித்திக் நுழைந்தான் . டாக்டர் சரவணன் அறைக்கு வெளியே அவர் அனுமதிக்காகா கண்ணாடி வழியே பார்த்து கொண்டு இருந்தான் , உள்ளே வா என சைகை மூலம் அழைத்தார் டாக்டர் சரவணன் .
" என்ன ரித்திக் இது யாருக்கும் தெரியாதே ? "
"என் உயிர் நண்பன் கிட்ட கூட சொல்லவில்லை டாக்டர் "
"வெரி குட் , எங்கே அந்த பிரேதபரிசோதனை அறிக்கை"
இந்தாங்க டாக்டர் என கையில் இருந்த பைலை கொடுத்தான் ரித்திக். அவர் அதை வாங்கி மேலோட்டமாக புரட்டி பார்த்தார் ..
" இதுல எத்தனை பேரோட ரிப்போர்ட் இருக்கு ரித்திக் ?"
" 100 பேர் யோட பிரேதபரிசோதனை இருக்கு டாக்டர் "
"வெரி குட் , இது ரொம்ப ரகசியம் ..கவனமா இருக்கணும் ..போன் ல கூட இத பத்தி பேசாதே என்கிட்ட ..நேருல மட்டும் தான் பேசணும் ."
"ஓகே டாக்டர் ..இந்த பிரேதபரிசோதனை அறிக்கை எதுக்குன்னு தெரிந்து கொள்ளலாமா ?"
" நேரம் வரும் போது நானே சொல்லுறேன் ..இப்ப வேற ஏதும் கேட்க்காதே ரித்திக் "
"ஓகே டாக்டர் ..ஒரு சின்ன உதவி டாக்டர் ?" இன்னு பேச்சை இழுத்தான் தயங்கியபடியே ரித்திக்.
" உனக்கா என்ன உதவி ரித்திக் ?"
" நான் ரயில் ல வரும் போது நடுத்தர குடுப்பதை சேர்த்த குழந்தை இதயத்தில்
பிரச்சனை இருப்பதை கண்டுபிடித்தேன் .அவங்க குடும்பத்துல ஆபரேஷன் பண்ணுற அளவுக்கு வசதி இல்லை டாக்டர் ..நீங்க உங்க பவர் யை பயன்படுத்தி
கொஞ்சம் உதவி செய்யணும் .அவங்கள இங்க வர சொல்லிருக்கேன் டாக்டர் " என்றான் தயங்கியபடியே ..
" இவ்வளவு தானா ? நான் கூட ஏதோ சப்ஜெக்ட் ல டவுட் கேக்க போறியோனு நினைசேன் ..நோ ப்ரோபலம் பாத்துக்கலாம் என் விசிட்டிங் கார்டு கொடுத்து இருக்கில்ல "
" ஆமா டாக்டர் ."
".சரி நீ காலேஜ் போ நான் பாத்துக்குறேன்.."
".சரி ஓகே.. நான் ஈவினிங் வரேன் டாக்டர் "என்று அவர் அறையை நகர்ந்தான் ரித்திக்"
லண்டன் மருத்துவரிடம் இருந்து அழைப்பு வந்தது டாக்டர் சரவணனின் மொபைல் க்கு .
" என்ன டாக்டர் எல்லாம் எப்படி போகுது " என்றது அந்த குரல் ..
" ரொம்ப நல்லவே போகுது. நாம பக்கத்துல நெருங்கிட்டோம் ,,இன்னும் 20 நாள் கழித்து ரிப்போர்ட் தரேன் என்று சொல்லி இணைப்பை துண்டித்தார் " டாக்டர் சரவணன் ,
தனது கணினி யை எடுத்து ஆராச்சி முடிவுகளை எடுத்து பார்த்து கொண்டே சிந்திக்க தொடங்கினர் டாக்டர் சரவணன் ..
(கண்கள் திறக்கும் பக்கம் 5 ஆக)

எழுதியவர் : (6-Jun-21, 1:23 pm)
சேர்த்தது : சசி குமார்
பார்வை : 80

மேலே