கண்கள் இருண்டால்

கண்கள் இருண்டால்!!!
பக்கம் : 5
லண்டன் மருத்துவமனை பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது ..டாக்டர்
ரேச்சர்ட் தனது லேப்டாப் இல் இந்தியா மருத்துவர் சரவணன் அனுப்பிய
பிரேத பரிசோதனை அறிக்கை பார்த்து கொண்டு இருந்தார் ..
" வாவ் அருமை நாம பக்கத்துல வந்துட்டோம் ..இன்னும் கொஞ்சம்தான் இது மட்டும் நல்லபடியா முடிச்சிருச்சு இந்த உலகமே நம்ம கைல " என்று மனதில் நினைத்தார் டாக்டர் ரேச்சர்ட்..
இணையம் மூலம் வீடியோ கால் செய்தார் இந்தியா டாக்டர் சரவணனுக்கு..
"வெல்டன் சரவணன் ...யூ ஆர் கிரேட் .. நாம சீக்கிரம் இலக்கை அடைய போறோம் சரவணன் "
" எஸ் டாக்டர் ,,, நான் கூட அப்படிதான் நினைக்கேன்.. டாக்டர் ரேச்சர்ட் நீங்க தப்பா நினைக்க வில்லை என்றால் நம்ம ப்ராஜெக்ட் ல மேலும் ஒருத்தர சேத்துக்க முடியுமா? "
"டாக்டர் சரவணன் இப்ப நம்ம பண்ணிக்கிட்டு இருக்கிற இந்த ப்ராஜெக்ட் பத்தி மொத்தம் மூணு பேருக்கு தான் தெரியும் ..அவ்வளவும் ரகசியமா இருக்கணும் வெளிய கசிந்தா நாம யாரும் ஊரோட இருக்க முடியாது ,,யாரை சேக்கணும் னு சொல்லுறீங்க ?"
" என்னோட மாணவன் ரதிக் "
" என்ன டாக்டர் சொல்லுறீங்க ஸ்டுடென்ட் யா ?? "
" ஆமா டாக்டர் அவனால் நிச்சயம் முடியும் ..என்ன விட அதிக சாதனை அவனுக்கு என் வயதாகும் போது நிச்சயம் பண்ணிருப்பான் அந்த அளவுக்கு திறமையான பையன் "
" ஓகே டாக்டர் சரவணன் நீங்க சொன்ன கரெக் யா தான் இருக்கும் ...உங்க மேல அந்த அளவுக்கு நம்பிக்கை இருப்பதால் தான் இந்த ப்ராஜெக்ட் உங்க கிட்ட கொடுத்தோம் ..அடுத்த மாசம் இந்தியா வரேன் ,,அப்ப இதுபத்தி பேசிக்கலாம் ..நானும் ஒரு தடவை அமெரிக்கா டாக்டர் ஸ்டீவ் கிட்டயும் கேட்கிறேன் .."
" ஓகே ரேச்சர்ட் ,,,தேங்க்ஸ் "
" சீக்கிரம் அடுத்த கட்டத்துக்கு போகணும் சரவணன் .."
வீடியோகால்இணைப்பு துண்டிக்க படுகிறது
சற்று யோசித்த பின் டாக்டர் சரவணன் தனது போனை எடுத்து ரித்திக் கால் செய்தார் .
" சொல்லுங்க டாக்டர் " என்றான் ரித்திக்
" ரித்திக் இன்னும் கொஞ்ச நாளுல உனக்கு படிப்பு முடிச்சுரும் ..அதனால நீ
இப்பவே அதிக பயிற்சி எடுத்துக்கணும் மத்தவங்கள விட " என்றான்டாக்டர்
சரவணன் .
" கண்டிப்பா டாக்டர் ..இன்னைக்கு கூட 3 மணிநேரம் எக்ஸ்ட்ரா ஒர்க் பண்ணினேன் ஹாஸ்பிடல் ல ..அதிக பேஷண்ட் அட்டன் பண்ணுனேன் டாக்டர் " என்றான் ரதீக்
" வெரி குட் ... இனி கொஞ்ச நாள் என்கூட சேர்த்து இருக்க முடியுமா ?"
" கண்டிப்பா டாக்டர் "என்றான் ரதீக்
" உனக்கு எந்த டைம் சரியாக இருக்கும் டெய்லி ?"
" மாலை 6 மணிக்கு மேல டாக்டர் "
" ஓகே ..இனி டெய்லி 6 மணி முதல் 9 மணி வரை என்கூடத்தான்
இருக்கணும் ..ஆனா நம்ம ஒர்க் கவெர்மென்ட் ஹொஸ்பிட்டல் இல்லை ..
இங்க அபிலோ மருத்துவமனை தான் பிரேத பரிசோதனை அறையில் ..உனக்கு ஓகே வா " என்ற டாக்டர் சரவணன் ...
ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் ஓகே என்றான் ரித்திக்...அதுக்கு அவர் மேல இவன் வைத்திருக்கும் அன்பும் மரியாதையை யும் ஒரு காரணம்..
" வெரி குட் " என்று போனை வைத்தார் டாக்டர் சரவணன் ,,,
ஏழை மக்களுக்கு வைத்தியம் பாக்குறதுதான் தனது இலட்சியம் ன்னு தெரிந்தும் ஏன் பிரைவேட் ஹாஸ்பிடல் அபிலோ ல ஒர்க் பண்ண சொல்லுறாரு ?? அதுவும் பிரேத பரிசோதனை ?? என்று யோசித்து கொண்டே மருத்துவ கல்லூரி நூலகம் நோக்கி நகர்ந்தான் ரித்திக்..
(கண்கள் திறக்கும் பக்கம் 6 ஆக)

கதை : பொ .சசிகுமார்

எழுதியவர் : சசி குமார் (6-Jun-21, 1:26 pm)
சேர்த்தது : சசி குமார்
பார்வை : 74

மேலே