கண்கள் இருண்டால்

கண்கள் இருண்டால்
பக்கம் : 7
டாக்டர் சரவணன் வீட்டிலிருந்து அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தான் ரித்திக். அதற்குள் டாக்டர் சரவணன் விபத்தில் இறந்த இளைஞனின் உடலை பிரேத பரிசோதனை செய்துவிட்டார் ஆனால் முகத்தில் மட்டும் சற்று வித்தியாசம் தெரிந்தது அதை பார்க்கும்போது முகத்தில் கண்கள் நீக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
பியூனை அழைத்தார் டாக்டர் சரவணன் "இவங்க குடும்பத்திலிருந்து யாரும் வந்து கேட்டாங்கன்னா விபத்தில் தலையில் அடிபட்டுருச்சி அதனால முகத்தில் இது தான் மிஞ்சியது அப்படின்னு சொல்லி உடலை கொடுங்க. நான் வழக்கம் போல உன் அக்கவுண்டுல பணம் போட்டு விட்டுருதேன்"
"சரிங்க சார் " என்று அறையை விட்டு நகர்ந்தான் பியூன்.
அந்த பெட்டியை கொடு என்றார் டாக்டர் சரவணன். அந்தப் பெட்டியை கொடுத்தான் ரித்திக். அது ஒரு சாவி இல்லாத பெட்டி அதை கடவுச்சொல் பயன்படுத்தி திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது டாக்டர் சரவணன் கடவுச்சொல் சரியாக அழுத்தியதும் அந்தப் பெட்டி திறந்தது.
அந்தப் பெட்டிக்குள் தான் தனியாக எடுத்து வைத்திருந்த கண்ணை பத்திரமாக உள்ளே வைத்தார் அதை சரியாக மூடி கடவுச்சொல்லை அழுத்தி லாக் செய்தார் டாக்டர் சரவணன்.
ரதிக் இதை பத்திரமாக கொண்டு போய் வீட்டுல செக்யூரிட்டி கிட்ட கொடுத்திடு நான் அப்புறம் பாத்துக்குறேன் சரி நீ கிளம்பு என்றார் டாக்டர் சரவணன்.
சிறு குழப்பத்தோடு அவர்கிட்ட எதுவும் கேட்க முடியாத தயக்கத்தோடு ஓகே டாக்டர் என்று சொல்லி நகர்ந்தான் ரித்திக்.
அந்தப் பெட்டியை வாங்கிக் கொண்டு டாக்டர் சரவணனின் காரை இயக்கினான் ரித்திக். அவன் மனம் மிகப்பெரிய
கேள்விகளை அவனிடம் கேட்டு அவனை குழப்பத்தில் ஆழ்த்தி கொண்டிருந்தது.
நாம் இதுவரை நல்லவர் என்று நினைத்த டாக்டர் சரவணன் கெட்டவரா? இதுபோன்று திருட்டுத்தனமாக கண்களை விற்று பணம் சம்பாரிக்கும் நபரா? இல்லையே அவர் அப்படிப்பட்டவர் இல்லையே சிறுவயதில் இருந்தே அவரை நன்கு அறிந்தவன் என்ற வகையில் அவன் மனம் அதை ஏற்கவில்லை.
எத்தனையோ ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்து உயிர் காப்பாற்றிய நாம் மிகவும் மதிக்கக்கூடிய டாக்டர் சரவணன் அப்படிப்பட்டவர் இல்லை என்றது அவனது மனதில் மற்றொரு குரல் .
கண்களை விற்க நினைத்தால் அவர் இதை மற்ற மருத்துவமனைக்கு அல்லவா கொடுத்திருக்க வேண்டும் ஆனால் அவர் வீட்டுக்கு கொண்டு போக சொல்லி இருக்காரே என்னவாயிருக்கும் ஒருவேளை வீட்டில் இதை பத்திரமாக வைத்துக்கொள்ள வசதிகள் உள்ளதா என பல கேள்விகள் கேட்டு கொண்டே இருந்தது அவன் மனது.
சரி இந்த முறை எப்படியாவது வீட்டிற்குள் சென்று பார்த்துவிட வேண்டும் அவர் வீட்டில் என்னென்ன இருக்கிறது என்று ஒரு முடிவுக்கு வந்தான்.
ஒரு வழியாக டாக்டர் சரவணனின் தெருவை அடைந்தான் அவர் வீட்டிற்கு முன் செக்யூரிட்டி தயாராக இருப்பது தூரத்திலிருந்து பார்க்கும் போதே தெரிந்தது அவர் வீடு வந்ததும் கார் கண்ணாடியை இறக்கினான்.
செக்யூரிட்டி "தம்பி ஐயா அந்த பெட்டியை வாங்கி வைக்க சொன்னாங்க" என்று பெட்டியை கேட்டான்.
இந்த முறையும் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியவில்லையே என்ற ஏமாற்றம் அவன் முகத்தில் தெரிந்தது பெட்டியைக் கொடுத்துவிட்டு கல்லூரி செல்ல காரை திருப்பினான் ரித்திக்.
மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் கார் நிறுத்துமிடத்தில் டாக்டர் சரவணனின் காரை நிறுத்திவிட்டு கார் சாவியை செக்யூரிட்டியிடம் "சார் வந்தால் கொடுத்துடுங்க" என்று சொல்லிவிட்டு வகுப்பறை நோக்கி சென்றான்
ஆமா உனக்கெல்லாம் எதுக்கு போன் பேசாமல் தூக்கி தூர போட்டுரு என்று ஒரு கோபமான குரல் கேட்க திரும்பி பார்த்தான் ஆம் அது பவித்ரா தான்.
என்ன சார் ரொம்ப பிஸி போல எப்ப போன் பண்ணாலும் எடுக்க மாட்டீங்க என்றாள்
ஹெய் சாரி.. நான் டாக்டர் சரவணனோட இருந்தேன் அவர் போன்றவங்ககிட்ட இருக்கும்போது நான் கவனத்தை வேறு எதிலும் செலுத்துவதில்லை. என்னை மன்னித்துவிடு என்று சிரித்துக்கொண்டே மழுப்பினான் ரதிக்.
"சரி வா கேண்டீன் போகலாம் அங்க போய் உட்கார்ந்து நாம பேசி ரொம்ப நாள் ஆகுது உன்கிட்ட நிறைய பேச வேண்டி இருக்கு வா போகலாம் " என்றாள் பவித்ரா.
எனக்கு நிறைய வேலை இருக்கு தப்பா நினைச்சுக்காத இன்னொரு டைம்ல பேசுவோம் நான் இப்ப லைப்ரரி போக வேண்டி இருக்கு கொஞ்சம் புக்ஸ் எடுக்கணும் சோ ப்ளீஸ் கோவிச்சுக்காத . நீ போய் கிளாஸ்ல இரு நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்துருவேன்
என்று கெஞ்சும் தொனியில் சொல்லிவிட்டு விரைந்தான் லைப்ரரி நோக்கி ரித்திக்.
கடவுளே!!! இவனக் கட்டிக்கிட்டு எப்படித்தான் வாழப் போறோன் எப்ப பாத்தாலும் ஆஸ்பிட்டல் படிப்பு மருத்துவம் இருக்கான் இவ மட்டும் தான் டாக்டருக்கு படிக்கனா? எத்தனை பேரு இங்க இருக்காங்க ஆனால் இவன் மாதிரி எவனுமில்லை ஒரே படிப்பு படிப்புன்னு.ஏன் நானும்தான் டாக்டருக்கு படிக்கிறான் ஆனா இவன மாறி எனக்கு படிக்கணும் தோணலையே சரி போகட்டும் இதுக்கு ஒரு முடிவு சீக்கிரம் கட்டணும்
என்று பரிமாறி கொள்ளாத காதல் உணர்வோடு உரிமையோடு நினைத்துக்கொண்டாள்.
அவன் மனசுல என்ன இருக்குன்னு தெரியலையே ஒருவேளை நட்பா காதலா இல்லை இரண்டும் கடந்த அன்பா சீக்கிரம் அவனிடம் கேட்டு விட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே
வகுப்பறை நோக்கி நகர்ந்தாள் பவித்ரா.
கண்கள் திறக்கும் பக்கம் 8 ஆக

எழுதியவர் : சசி குமார் (6-Jun-21, 1:27 pm)
சேர்த்தது : சசி குமார்
பார்வை : 71

மேலே