தன்னம்பிக்கை

வேதனைகள் சாெல்ல முடியவில்லை
சந்தாேஷமாய் இருக்க முடியவில்லை
விடியல் வர வில்லை
வெளிச்சம் வந்து சேரவில்லை
கண்ணீர்க்கு பஞ்சம் இல்லை
கடவுள்ளுக்கு இரக்கம் இல்லை
வேலை இன்னும் கிடைக்கவில்லை
வசந்தம் வாசல் தேடி வர வில்லை
வாழ்வுக்கு அர்த்தம் புரியா வில்லை
மாற்றம் இன்னும் நடக்க வில்லை
நம்பிக்கை இன்னும் இழக்கவில்லை
வெற்றி பாதையை விடவில்லை
முயற்சியை முடிக்க வில்லை
முடியாமல் பாேவது இல்லை

எழுதியவர் : தாரா (8-Jun-21, 12:44 am)
சேர்த்தது : Thara
பார்வை : 204

மேலே