தூது செல்வீரோ

மேகங்களே மேகங்களே
எனக்காக தூது செல்வீரோ
என்னவள் அங்கே எனக்காக
ஜன்னல் ஓரம் எனை நினைத்து
வாடி கலையற்று ஏக்கத்தோடு
நிற்கிறாள்

கொஞ்சம் என் காதலை
அவள் கண்ணத்தில் மழைச்சாரலாய்
சேர்த்திடுங்கள்

காத்திருந்து காத்திருந்து
வாடிய முகம்
கொஞ்சம் குளிரட்டும்
நெஞ்சம் நிறைய நனையட்டும்

சிறு கோபம் கொண்டே
உங்களை அடிக்கவும் செய்திடுவாள்
பின்பு அள்ளி கொஞ்சிடவும் செய்திடுவாள்

தென்றலே தென்றலே கொஞ்சம்
எனக்காக தூது செல்வீரோ
பருவமலர் ஒருத்தி
காவேரி கரையோரம்
நித்தம் எனக்காக
பூச்சூடி என் வரவை எண்ணி
இழைப்பாருகிறாள்

கொஞ்சம் என் பாடலை
அவள் செவிகளில் சேர்த்திடுங்கள்
மங்கையின் இழைப்பாரல்
இனிதே இனிமையாய்
தனிமை போக்கி
மணவாளன் மடியில்
அதே காவேரி கரையோரம்
இன்புற்று இழைப்பாரும் நாள்
வெகுதொலைவில் இல்லை
என்று அவள் செவிகளில்
தேனாய் உறைத்திடுங்கள்
வெட்கத்தில் இமை மூடிடுவாள்
அத்தருணம் என்காதலை
அவள் இமையில் முத்தமாய் பதித்திடுங்கள்

பறவைகளே பறவைகளே கொஞ்சம்
எனக்காக தூது செல்வீரோ
பாவையொருத்தி
பட்டுத்தாவணி உடுத்தி
வண்ண பூஞ்சோலையில்
எனை எண்ணி கவி பாடி
அதை நீவீர் கேட்க காத்திருக்கிறாள்
செல்லுங்கள் அவளிடம்
என் கவிகளோடு
அவள் கரங்களில் அமருங்கள்
அவள் பாட்டை கேளுங்கள்
அவள் மனம் குளிர இசையுங்கள்
அப்போ அப்போ என் கவிகளை எதிர்பாட்டாய்
அவள் இதழ்களில் இசைத்திடுங்கள்

தூதர்களே மறவாது ஒன்றை
கேட்டு வாருங்கள் என்னவளிடம்
திங்கள் பல கடந்தே
நித்திரை பல தொலைத்தே
கனவுலகில் என்னை கடத்தி சென்று
என் ஏக்கத்தை தூண்டி
இன்னும் எத்தனை காலம்
இந்த தனிமை என்று மறவாது
கேட்டு வாருங்கள்

எழுத்து சே.இனியன்

எழுதியவர் : சே.இனியன் (8-Jun-21, 11:57 am)
சேர்த்தது : இனியன்
பார்வை : 178

மேலே