என் இதயத்தில் நீ

என் இனியவளே
உன் மீது காதல் கொண்டேன்

நீ போகும் இடமெல்லாம்
உன்னை தொடர்ந்து வந்தேன்

திடீரென்று
உன்னை காணவில்லை
சுற்றும் முற்றும் பார்த்தேன்
எங்கு தேடியும் என் கண்ணுக்கு
நீ தெரியவில்லை ..!!

காத்திருந்து காத்திருந்து
நேரங்கள் கரைந்தது
கவலைக்கொண்டேன்

சிறிது நேரம் கழித்து
நான் உங்கள் இதயத்தில்
இருக்கிறேன் என்று
உன் குரல் கேட்டது
என் இதய கூட்டில் இருந்து ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (9-Jun-21, 2:01 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : en ithayathil nee
பார்வை : 517

மேலே