இரு பைகள்

உடலில்
இரண்டு பைகளுண்டு...

ஒன்று...
கொட்டுவதை மட்டும்
வாங்கும்...
பிறகு அதை
ஜீரணித்துவிடும் ...

மற்றொன்று....
அனைத்தையும் உள் வாங்கும்
ஆண்டுகள் பல
போன பின்பும்
அதை அப்படியே
அவ்வப்போது
வெளிகாட்டும்...

முதல் பை...இரைப்பை
அடுத்தது....மனப்பை.

முதல் பை
உன் கட்டுக்குள் ...
இரண்டாம் பையோ
நீயே...அதன்
கட்டுக்குள்.

எழுதியவர் : PASALI (10-Jun-21, 7:15 am)
பார்வை : 34

மேலே