360

எப்போது தனிமனிதன் ஒருவன் தன்னைத் தானே கடவுள் என்று அடையாளம் காட்டிக்கொண்டு , அதை அனைவரிடமும் பிரகடனம் செய்ய மெனக்கெடுகிறானோ, அவன் மகா அயோக்கியனாகத்தான் பின்னால் ஆதாரபூர்வமாக அறியப்படுகிறான்... அவன் அடிப்படை மனிதத்தன்மை கூட இல்லாத மிருகத்திற்கும் கீழானவனாக வாழ்ந்துள்ளான் என்பதும் பலமுறை சான்றுடன் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது...
அப்படி இருக்க, இன்னும் இந்த உலகம் இதுபோன்ற கேடுகெட்ட ஈனப்பிறப்புகளை கண்மூடித்தனமாக ஏன் நம்புகிறது ?

கடவுளை கண்ணால் காண வேண்டும் என்றத் துடிப்பா...?
அனைத்துப் பிரச்சனைகளும் அவனால் தீர்க்கப்படும் என்ற முட்டாள்தனமான நம்பிக்கையா...?
கடவுள் என்ற மகா சக்தியின் மீது சரியான புரிதல் இல்லாத நிலையா...?
அஞ்ஞானத்தால் ஆன்மீகச் சிந்தனையில் தெளிவில்லாத தன்மையா...?
உலக அத்தனை சுகபோகங்களுடன் வாழ்ந்து , வித்தைக் காட்டுபவர்களையும், விழா எடுத்து ஆனந்தக் கூத்திடுபவர்களை ஆண்டவன் என்று எப்படி நம்புகிறீர்கள் ?

பெற்றோர்களே....
ஆதியும் அந்தமும் இல்லா ஆண்டவனை ஆத்மார்த்தமாக உணர முயற்சி செய்யுங்கள்..
இறைவன் உன்னிலும் உள்ளான் , என்னிலும் உள்ளான் என்பதை பூரணமாய் நம்புகள்....
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற ஔவையின் கூற்றை பசுமரத்தாணியாய் பிள்ளைகள் மனதில் பதிய வையுங்கள் ...
அதை முழுதாய் நம் பிள்ளைகள் ஏற்கும் அளவிற்கு, முன் உதாரணமாக நீங்களே வாழ்ந்துக் காட்டுங்கள் .....

அப்போதுதான் காளான் போல முளைக்கும் நச்சு ஆ(சாமிகள்) தலையெடுக்கமாட்டார்கள்....

இத்தனை நடந்தப்பின்பு
இவ்வளவு பட்டப்பின்பு.., இப்போதாவது விழித்திடுங்கள்....

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (10-Jun-21, 9:20 am)
பார்வை : 32

மேலே