கலைஞருக்கு வாழ்த்துக்கள்

எம் தலைவனுக்கு வணக்கத்துடன் வாழ்த்துக்கள் !🙏💐🎂🎁

முத்தமிழ் வித்தகனே....
முக்கனி இனியனே...
மூவேந்தர் குணநலனும்
முத்தாய்ப்பாய் பெற்றவனே....

எத்திக்கும் தமிழ் மணம் பரப்ப
சித்தமாய் வாழ்ந்தவனே -உன்
தித்திக்கும் தமிழாலே
பித்தனாய் எமை ஆக்கியோனே

நத்தமாய் தமிழர் நெஞ்சில்
பத்திரப் பதிவு ஆனதனால்....
மேதகு புதல்வனை எமக்காய்
சொத்தகமாய் தாரைவார்த்தவனே

நித்திரை நீ சென்றாலும்
நித்தம் உனை நினையாத நாளில்லை ....
இத்திரையில் உனைபோல் இனி
எங்கனமும் எவரும் பிறப்பதில்லை!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (10-Jun-21, 9:22 am)
பார்வை : 24

மேலே