361

நீ.....நீயாகவே இரு!

அதிகம் பேசினால் வாயாடி
அளவாய் சொல்லுதிர்த்தால் அமுக்கறை

அதிகம் சிரித்தால் பல்லிளிச்சாள்
அமைதியாய் இருத்தால் உம்முனா மூஞ்சி....

மனம் திறந்து பேசினால் ஓட்ட வாயி
மனம் மறைத்தால் அழுத்தக்காரி

ஆமோதித்துப் பேசினால் அடங்கிப்போகிறவள்
எதிர் வாதம் செய்தால்
வம்புக்காரி

வலியச் சென்று பேசினால்
சந்தர்ப்பவாதி
வேண்டாமென விலகினால்
ரோஷக்காரி

ஆண்களிடம் நெருங்கி பேசினால் அவுசாரி
அவ்வப்போது வம்பு பேசினால் அகங்காரி

பாசத்துடன் பழகினால் வேசக்காரி
பாரா முகமாய் சென்றால்
பாசாங்குக்காரி.....

பணிவுடன் நடந்தால் ஏமாளி
துணிவுடன் நடந்தால் ராங்கி

பிறர் புகழ் பாடினால் கைத்தடி
நம்மைப் பற்றி பேசினால் தம்பட்டம்

ஊர் பிரச்சனைகளை பேசினால் வீண் வம்பு
நம் பிரச்சனைகளை மட்டும் பேசினால் சுயநலம்

சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பேசினால் பச்சோந்தி
சட்டென பட்டதைப் பேசினால்
அதிகப்பிரசங்கி

எப்படி நீ பேசினாலும் ...
எப்படி நீ நடந்துக் கொண்டாலும்...
ஏதாவது ஒரு அடையாளத்தை
ஏற்றிவைக்கும் உலகம் உனக்கு...
எதற்கும் கவலைப்படாதே...
நீ...நீயாகவே இரு...!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (10-Jun-21, 9:23 am)
பார்வை : 29

மேலே