விளாம் பழம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
எப்போதும் மெய்க்கிதமாம் ஈளையிரு மல்கபமும்
வெப்பாருந் தாகமும்போம் மெய்ப்பசியாம் - இப்புவியில்
என்றாகி லுங்கனிமேல் இச்சைவைத்துத் தின்னவெண்ணித்
தின்றால் விளாங்கனியைத் தின்
- பதார்த்த குண சிந்தாமணி
இப்பழம் சுவாசம், காசம், கபம், பித்தம், தாகம், இருமல் இவற்றை விலக்கும்; உடலுக்கு சுகமும் நல்ல பசியும் உண்டாகும்