மக்களும் நலமடைவர்

குடி மக்களின் வறுமையையும்
கண்ணீரையும் துடைத்து
வாழுகின்ற மக்களுக்கு
வளமான வாழ்வைத் தருவது
ஒரு அரசின் முக்கிய பொறுப்பு

நாட்டு மக்கள் அனைவரும்
நலமோடு வாழ
நாட்டின் மனித ஆற்றலும்
இயற்கை வளங்களும் பயன்பட
திட்டங்கள் பல அமைத்திட வேண்டும்

வறுமை ஒழிப்பு, குடிநீர்
வேலை வாய்ப்பு, கல்வி- அதனோடு
மருத்துவ வசதிகளும்
மறக்காமல் செய்து தர வேண்டியது
அரசின் கட்டாய கடமையாகும்

ஒவ்வொரு குடிமகனும்
அரசாங்கத்தில் தானும்
ஒரு அங்கமென க் கொண்டால்
அந்த அரசு எப்போதும்
வலுவுள்ள அரசாக அமையும்

அரசைத் தட்டி கேட்கவும்
அதனைக் கட்டி காக்கவும்
மக்களுக்கு உரிமையுண்டு,
மகராசி கொரோனா வந்தபோது
எல்லோரும் சேர்ந்து செயல்பட்டது போல்
செயல் பட்டால் நாடும் முன்னேறும்,
மக்களும் நலமடைவர்

எழுதியவர் : கோ. கணபதி. (11-Jun-21, 5:22 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 21

மேலே