மாசறு பொன்னே
முழுமதி போன்ற முகமும்
முகிலின் கருவென முடியும்
வில்லின் வளைவென புருவமும்
கெண்டை மீனென விழியும்
தங்கத்தின் மின்னலாய் நிறமும்
தந்தத்தில் செய்ததாய் மூக்கும்
அறுத்தப் பழம்போல் உதடுகள்
முல்லை அரும்பென பற்கள்
ஆசையைத் தூண்டும் கழுத்தும்
அழகாய் சரிந்த தோளும்
அகன்று செழித்த முதுகும்
அவலைத் தூண்டும் மச்சமும்
பித்தாய் ஆக்கிடும் மார்பும்
கொடியாய் குறுகிய வயிறும்
குளமென தெரியும் தொப்புள்
குதுகலம் தந்தது என்னுள்
அல்லி மலரே நீதான்
என்னுள் தீபமாய் வந்தாய்
புதையலாய் உன்னையும் என்னுள்
புதைத்தேன் மாசறு பொன்னே .
----- நன்னாடன்.