ஆவலுடன் காத்திருக்கிறேன்

எப்படி
தொடங்குவது
நான்
எப்படி
தொடங்குவது..

என்னில்
எழும்
எண்ணில்லா
எண்ணங்களை
எப்படி
தொடங்குவது
எழுத்தில்..

உனக்கு
ஆயிரம்
பண்ணிசைத்து
பாடதுடிக்கும்
நெஞ்சம்..
வார்த்தை வாராமல்
வரிகளில்
கண்ணீர் துளிகள்
மட்டுமே
மிச்சம்..

நனைந்த
காகிதம்
உனக்கு
அனுப்புகிறேன்..
உனக்கு
மட்டுமே
புரியும்
அது
வெறுங்காகிதம்
அல்ல
என்று..

விடுபெறவா
அழைத்தாய்
உன்
விழிகளின்
மொழியில்
விடைபெற்றும்
நீங்க
முடியவில்லை
நினைவுகளின்
பிடியில்

கோலம் மாறுதல்கண்டு கவலை ஏனோ
ஞாலம் நாளை உனைபோற்ற
வாவென்றழைப்பைது
கேட்கவில்லையோ
அன்பில் மலர்ந்த புன்னகை
தீபமே..
ஆவலுடன்
காத்திருக்கிறேன்
உலகம்
உன் பேர் உரைக்கும் நொடிக்காக...
அதுவே நிறைவு.

எழுதியவர் : (12-Jun-21, 10:56 am)
சேர்த்தது : Rani
பார்வை : 297

மேலே