நங்கையே நீயேயென் தங்கை

அருள் நிறைந்த கண்கள்
ஆனந்தம் அள்ளிடும் புன்னகை
இங்கிதம் பேசிடும் மொழிகள்
ஈட்டிபோல கவசம் தரும் சாதுர்யம்
உளஉறுதி கொளலில் தைரியம்
ஊக்கம் கொண்டு உழைத்திடும் உத்வேகம்
எளிதாம் எதுவும் எனும் எண்ணம்
ஏற்றம் தரும் மாற்றம் ஏற்கும் பாங்கு
ஐயம் கொளா ஆக்கம்
ஒறுத்தல் நினைக்கா மனம்
ஓதலில் உச்சியில் இருக்கும் குணம்
ஒளவைக்கும் அவையடக்கம் தரும் நிலமகள் நீதரும் தமிழ்வணக்கம் .


நங்கையே எம்தங்கையே தரணிநாயகி
நீயென் இரத்த சம்மந்தமிலா சகோதரி
ஆயினும் உணர்வில்நீயே யென்சொந்தம்

எழுதியவர் : பாளை பாண்டி (12-Jun-21, 1:52 pm)
பார்வை : 114

மேலே