நவீன நங்கை எனும் மங்கையே

மிடி போட்டு மிடுக்குடன் நட
சுடி போட்டு சுறுசுறுப்புடன் நட
தாவணி போட்டு தவழ்ந்து நட
சேலை கட்டி சீக்கிரம் நட

ஓலைகட்டி உட்கார்ந்து விட்டேன்யென
ஓய்ந்துவிடாதே உன்வாட்டம் அறிந்து
நோட்டம்காணும் கூட்டம்எதுவென உணர்
உத்தம வேடம் தரித்து உன்உணர்வை மிதிப்பது யார் மதிப்பது யாரென உன்மதி
கொண்டு ஆராய்ந்திடு நிம்மதி வந்திடும்

அன்பை அகத்தில்மட்டும் காட்டிடு
பண்பை பார்வையில் தீட்டிடு
காரியத்தில் வீரியம் கொள்
கல்வியில் வேள்வி கொள்
சாதிப்பது புதிதல்ல அறிந்து தெளி
நவீன நங்கையே...

எழுதியவர் : பாளை பாண்டி (12-Jun-21, 4:13 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 51

மேலே