எதரிர்காலம் என்ற மாயைதான்

எல்லாம் தேடல்தான்
எதரிர்காலம் என்ற மாயைதான்!

உன்னால் முடியும் உன்னால் முடியும்,
உலகத்ததைக் காக்க உன்னால் முடியும்;
ஓரு பிரபஞ்சத்தைப் படைக்க உன்னால் முடிமா!
ஓடும் சூரியனைத் தடுக்க முடிமா!

பிசைந்து வடித்த பூமி இல்லை;
பிளந்து வெடித்து பிறந்த பூமி;
பிடிவாதமாய் இருந்து,
வந்த பூமியை அழித்து விடாதே!
வாழும் பூமியைக் கெடுத்துவிடாதே!

பூமிக்கு இனி சுமக்க இடம் இல்லை,
பூலோகம் புதையும் தருனம்,
புரிந்து கொள்.
புறப்படு வேற்று உலகத்ததைத் தேடு,
வேர் ஊன்றட்டும் உனது வாரிசு.

வெடித்து வெடித்து சிதறும்முன்
மாற்று உலகத் தேடு.

மக்கள் தொகை பெருத்து (வெடித்து) தினர இருக்கிறது
இந்த பூமி,
சூரிய நெருப்பில் விழுந்து,
சூனியாகும் முன்,
சுறு சுறுப்பாய் செயல் படு.

சுருண்டு சாகப்போகின்றாய்,
சோறு தண்ணீர் இல்லாமல்,
ஓடி ஓடி ஒளியும் நீ,
ஒண்ட இடம் இல்லாமல்,
ஒட்டிக் கிடக்கப்போகின்றாய்,
ஓடி ஓடி தேடிய சொத்துக்கள் எல்லாம்,
ஒரு நொடியில் சூறைபோகப்போகிறது,
வரட்சியின் வாயில் விழுந்து சாகப்போகின்றாய்.
வறுமையின் பிடியில் சிக்கப்போகின்றாய்.

வயக்காடு இருக்காது,
வாய்க்கால் இருக்காது,
வயித்துக்கு உணவு கிடைக்காது.

வாய்விட்டு கதர உனக்கு முடியாது,
ஆக்சிஜனையும் விலைக்கு வாங்க வேண்டும்.

வயதானவனே இல்லாமல் போகிறான்!
வயதானவனை வம்படியாக,
சாகடிக்கப் போகின்றாய்.

வாயில் மாத்திரையைப் போட்டு,
வயிற்றுப் பசியைப் போக்கப் போகின்றாய்.
அடிக்கும் காற்றும் வற்றிவிடும்;
ஆடியமரங்கள்
அடியோடு இல்லாமல் போகிவிடும்.

சூரியனும் அடியோடு
அஸ்தமித்து விடலாம்.
சூனியம் அதுதான்
நீயே உனக்கு உன் இனத்துக்கு வைத்த
சூனியம் அது தான்.

கடலுக்கடியில் வாழ ஓடலாம்
கறையான்போல் மொய்த்து கிடக்கலாம்

மண்இல்லாத பூமிக்குள்
உறங்கப் பார்க்கலாம்.

சவகுழிகள் இல்லாத வாழ்வைத்தேடலாம்;
இரவும் நீலலாம்;
இனி பகலும் சுருங்கலாம்;
குருவிகளின் பறவைகளின்
சப்தங்களையும் ரீக்காரத்தையும்,
கைபெசியில் கேட்கலாம்.

நடக்க விசையைத்தேடுவாய்;
பறந்துபோகவே துடிப்பாய்;
வானகனங்கள் நிறுத்தக் கூட இடம் இல்லாத வையகம்;
வைரஸ் ஆட்டிப்படைக்கும் வையகம்;
வம்பை விலைக்கு வாங்கப் போகின்றாய்;
இலட்ரானிக் மூளை பொருத்தப்போகின்றாய்;
உடம்பின்எல்லா பேர்பார்ட்ஸ்களும்,
மிண்ணணு கலன்கலாகப்போகிறது.
செயற்கைக் கண்ணீருதான்.

அதிகாலைப்பொழுது அணையப்போகிறது;
உறையும் பனிக்குள் உடலை மூடப்போகின்றாய்;
மனிதனை மனிதன் அடித்து உண்ணப்போகின்றான்;
மனிதம் மறைய்பொகிறது.

திறந்த மேனியே உனது ஆடையாகப்பொகிறது;
மரணப்பாதையில் மனித இனம்;
மழுங்கிப்போன உணர்வுகள்;
காதலுக்கு ஊட்டம் இல்லை;
கலைகளுக்கு கலைஞன் இல்லை;
பேச நேரமில்லை;
பூமியே பரிபோக இருக்கிறது

எந்த கிரகணத்திலிருந்து
எவன் வருவானோ!
எதை எடுத்தச் செல்வானோ!
மனிதனின் ஆசை வெறியில்;
அழிய இருக்கம் பூமி;
ஆற்றுமணலைத்திருடிய கும்பல்;
அண்டை கிரகணத்தை சுரண்ட புறப்படும்;
அடிக்கும் கொள்ளையை அடைத்துவைக்க
வேற்று கிரகணத்தை விலை கொடுத்து வாங்கும்;

புழுவாய் இறக்க இருக்கும் மக்கள் கூட்டம்;
வீசம் புயலும்;
விழும் மழையில்லாது
வாழத்தான் போகின்றான் மனிதன்
இங்கு அன்றாடம் குண்டுமழைகள்தான் பெய்யும்;
கூட்டமல்ல கண்டம் கண்டமாக மனித இனம்
அழியத்தான் போகின்றது. .
ஒழித்த வைத்த சொத்தக்கள் சூறையாடப்படும்;
பதுக்கள்காரன் பணக்காரனின் உடமை பரிபோகும்.

சாதிக் கொடுமை கிடையாது;
ஆச்சியாளனின் அதிகாரம் செல்லாது;
அழிவுக்குள் அழிவுதான்;
ஆசையில்லாத மனித மிருகம் தான்;
ஆட்டிப்படைக்கப்போவது
விஞ்ஞானம் தான்.

உன் கணக்கு இங்கு செல்லாது;
ஓடி ஓடி தேடத்தான் போகின்றாய்;
ஓதுங்க இடம் இல்லாமல்;
தினரத்தான் போகின்றாய்.

வீடு காடு இல்லாமல்
நின்று கொண்டேதான் உறங்கப்போகின்றாய்;

திண்பதற்கு உணவு இல்லாமல்;
திண்டாடத்தான் போகின்றாய்.

வரும் தொத்து நோயால் பதறப்போகின்றாய்;
நாய்போல் திரியத்தான் போகின்றாய்;

வலியவன் எளியவனை அடக்கத்தான் போகின்றான்;

உன் வயிற்றிலிருந்து வராது கழிவு;
கழிவே உடம்புக்குள் மறுசுழ்ச்சி ஆகப்போகின்றது;

தாயில்லாமல் குழந்தை
தடைபோடாத விஞ்ஞனத்தின் புதுமை
மரபு இல்லாத;
மாற்ற பட்ட அணுக்கள்;
மனித மிருகமாக புதிய உறு பெறப்போகின்றது.

உன்சுருகிய சரீரத்திற்குள்
விஞ்ஞான மூளை - மிண்ணனுதகடு- (எலக்ட்டானிக் சிப்) எங்கோ முளைக்கப்போகின்றது.
எல்லாம் இயந்திர மயமாக்கம் மிண்ணனுதகடு - சிப்புதான்
உன்னை அடையாலம் காட்டப்போகின்றது.
வீட்டுக்கும் விலாசம் கிடையாது;
உனக்கும் விலாசம் கிடையாது;

ரேசன் காடு கிடையாது;
மாலும் கிடையாது

மானிடா மறந்து விடு உன் ஆசைகளை;
நாக்குக்கு ருசி கிடையாது
நாளை என்னதான் உண்ணப்போகின்றாயோ!
எல்லாம் விஞ்ஞானத் தேடலும்;
விஞ்ஞான விவரீதம் தான்.

திருமணம் இல்லாத உறவு;
உறவுக்கு அர்த்தம் தெரியாத இனப்பெருக்கம்;

உன் சந்ததியர்களோடு,
உடன் வாழ வரும் வேத்து உலக மக்கள்.

மொத்தமோ சில்லரை வியாபாரமோ இல்லை;
வெடித்துச் சிதறும் மக்கள் தொகை.
எரியும் பூமி ;
எலும்பில்லா மனிதன்;
நாடு கிடையாது எல்லை கிடையாது
பிணத்தில் மேல் பயணம் செய்யப்போகின்றாய்;
பிடிவாதம் இல்லை;
கல்லறைகள் கிடையாது;
ரசாயனத்தால் நொடியில் கரைந்து விடுவாய்.

புதிய கிருமிகளின் புகலிடம்;
போராட்டமே வாழ்க்கையாகும்.

மனித ராட்சசா
மலை இருக்காது;
மண்ணும் இருக்காது;
குடைந்து குடைந்து;
பூமி உடையத்தான் போகின்றது.

செயற்கைக்கோளால்,
மழைகள் மொழியத்தான் போகின்றது.

புவியின் ஒவ்வொரு பகுதியும்;
உடையும் புட்டாய் உடையத்தான் போகின்றது.

எத்துணை ஆண்டுகளைத் தாங்கப்போகின்றதோ இந்த பூமி.

நோண்டி நோண்டி
பூமியின் அடுதத் பகுதிக்குப் போகப்போகின்றாய்.

ஓசோன் ஓட்டையைவிட
ஓரு பெரிய ஓட்டையைப்போட்டு ஓலம் இடப்போகின்றாய்
.
மண்ணை நோண்டு மலையை குடைந்து வாழப்போகின்றாய்.
குள்ளர் வாழ்கையும் உண்மையாகப்போகிறது
ஏவுகளை ஏவி ஏவி,
அடித்து அடித்து சாவு வரப்போகிறது.

அண்டை கோள்களுடன் போராடி,
எல்லாம் முடிவுக்கு வரத்தான் போகின்றது.

மாண்டு போகப்போவது மனித இனம்.
மண்டியிட்டு அழக்கூட இடம் இருக்காது.

மக்கும் குப்பையாகப்போகின்றாய்;
மனித கூட்டம் இல்லை,
மக்கிடும் மனிதக் குப்பையாகப்போகின்றாய்.

நோண்டி பிரபச்சத்தைத்தேடி,
படை எடுக்கப்போகின்றாய்.

வேற்று உலகத்திலிருந்து
வெடிவைத்து தகர்த்தான் போகின்றாய் பூமியை.

உன் செய்கையே செயற்கையாகத்தான் போகின்றது.

செயற்கை உலகை செய்யத்தான் போகின்றாய்.
வாழும் செயற்கை உலகத்தை
எல்லாம் எல்லாம் தான்
படைக்கத்தான் போகின்றாய்.

புவியருகில் புதிய செயற்கை
பூலோகத்ததை படைக்கப்போகின்றாய்.

புரட்டிப்போட போகின்றாய்
உலகை.
எத்துணை கோள்களைப் படைக்கப்பாகின்றாயோ!
எத்தனை கிரகணங்களை இணைக்கப்போகின்றாயே!
எத்தனை கிரகணங்களை அழிக்கப்போகின்றாயோ!
எல்லாம் தேடல் தான் ;
எதரிர்காலம் என்ற மாயைதான்!

எ. Muthuvezhappan

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (12-Jun-21, 8:44 pm)
பார்வை : 80

மேலே