உன்னை அவ்வளவு சுலபத்தில் தொலைத்து விடமாட்டேன்

இமைகள் சாய்ந்து உறங்க தயாராகிவிட்டது!

ஆனால் உன் முகம்
ஏனோ நிலவு போல
என் விழிகளில் உதயமாகிறது!

நினைவுகள் அடி மனசில் அலையடிக்க நித்திரையை
கைது செய்ய வந்து
விட்டாய் இந்த வேளையில்!

புளியம் பூவுடன் வெல்லம் சேர்த்து இடித்து உண்பது போல சுகமாய் இருக்கிறது உன் நினைப்பு!

கடலோர சங்குகளாய் உன் பெயரை எதிரொலிக்கிறது என் இதயம்!
கடலுக்குள் மூழ்கி
நான் தேடி எடுத்த
அரிய முத்து நீ!

உன்னை அவ்வளவு சுலபத்தில் தொலைத்து விடமாட்டேன்!

என் அன்பு காதலி!

எழுதியவர் : (12-Jun-21, 10:57 pm)
சேர்த்தது : சுதாவி
பார்வை : 89

மேலே