கொரொனா யுகம்
இது இன்று கொரொனா யுகம்!!!!
ஓடி உழைத்தவரெல்லாம் ஒடுக்கப்பட்ட காலம்
நாளெல்லாம் உழைத்தவர் 144ல் அடங்கிய காலம்
ஓய்வில்லாமல் மருத்துவர்கள் உயிரை பணயம் வைக்கும் காலம்
உண்ண உணவுக்கு கவலையில்லை உயிருக்குப் பயம் ஒருபக்கம்
உணவே இல்லாமல் உயிர் போய்விடுமோ என்று ஒரு பக்கம்!
திருடி சேர்த்தவர்கள் திடமாய் உட்கார
காய்கறி விற்பவர் கூட கள்வராய் ஒரு பக்கம்
அரசுக்கும் மக்களுக்கும் இடையில் பந்தாக உதைக்கப்படும் காவலர்கள்;
காசிருப்பவன் கம்பீரமாய் கத்துகிறான் காவலர்முன்
கைகட்டி தான் நிற்கின்றனர் காவலர்கள்
ஏழை கொஞ்சம் சத்தம் கூட்டினால் ஏனென்று கேட்காமல் அடிக்கின்றனர்
உனக்காக அணியாமல் ஊருக்காக அணிகின்றாய் முகக்கவசத்தை
தடுப்பூசி வரும்போது தவறாய் விமர்சிக்கிறாய்
பற்றாக்குறையானால் அரசை கேள்வி கேட்கிறாய்
அரசு தவறு செய்தால் எதிர்க்கிறாய்
நீ செய்த தவறை மறைக்கிறாய்
பிறருக்கு இன்று நீ செய்யும் உதவி உன்னுயிரைப்
பாதுகாப்பது
முகக்கவசம் அணிவோம் கொரோனவிலிருந்து மீள்வோம்
தடுப்பூசி இடுவோம் நம் நாட்டை மீட்போம்!!!!!!!!!!!!