எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்

ஒருவர் தன் வாழ்க்கை குறிக்கோள்களிலும் கொள்கைகளிலும் மன உறுதியுடன் செயல்படுபவர் என்றால், அது மகத்துவம்!
எல்லோருடைய மனதிலும் கிணற்று நீர் போல் எப்போதும் ஊறிக் கொண்டிருப்பதோ, ஒரு சில விஷயங்களுக்கு ஒவ்வொருவர் கொடுக்கும் முக்கியத்துவம்!

சினிமா மோகம் என்றால், அதையொட்டிய செய்திகளையே அதிகமாகத் தேடி அலைந்திடும், மனமும் கண்களும்!
பாட்டுப் பிரியன் என்றால் பாடல்களையும் அவை சம்பந்தப்பட்ட தகல்வல்களை நாடி ஓடிடும் மனமும், சிந்தனைகளும்!
அரசியலில் ஆர்வம் என்றாலோ, ஒரு நாளில் அடிக்கடி அரசியல் குறித்த செய்திகளை, போனிலோ, டிவியிலோ கண்களும் செவிகளும் தேடி அலசிக் கண்டுகொள்ளும்!
கிரிக்கெட் மற்றும் விளையாட்டுகளில் ஆசை என்றாலோ, மணிக்கணக்கில் இவற்றை டிவியில் பார்த்து ரசிக்கும் கண்கள்!
சிலர்(இந்த மாதிரி மக்கள் மிகவும் குறைவு) தினமும் பாதி நாளை, பல்வேறு புத்தகங்கள் படிப்பதில் நாட்டத்துடன் செலவழிப்பார்கள்.
நேரிலோ, போனிலோ எவருடனாவது பேசிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற உந்துதல் உள்ளவர்கள், நாளின் கணிசமான ஒரு பகுதியை எவருடனாவது பேசிப் பேசியே கழிக்கிறார்கள்!

இது போன்று ஒவ்வொருவருக்கும் சில குறிப்பிட்ட விஷயங்களில் வெகு தீவிரமான ஈடுபாடு இருக்கும்.அந்த ஆசையை தீர்த்துக் கொள்ள எவ்வளவு நேரமிருந்தாலும் அவர்களுக்கு போதாது.

வாழ்வின் இறுதிக் கட்டம் வருகையில் எல்லோரும், தாம் எதற்கெல்லாம் வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுத்தோம் என்பதை எண்ணி ஆராய்ந்து பார்ப்பார்கள். இவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டவைகள், எந்த அளவுக்கு அவரை மேலும் முதிர்ச்சி அடைந்தவராகவோ தேர்ச்சி அல்லது வலிமை மிகுந்தவராக மாற்றியது அல்லது அவைகளால் ஒரு உபயோகமும் இல்லாமல் போனது அல்லது இது போன்று நேரத்தை செலவிட்டதால்தான், ஓரளவுக்கு வாழ்வின் வேறு இன்னல்களை தம்மால் மறக்க முடிந்தது என்பது போன்ற சிந்தனைகளை அவர்கள் தீவிரமுடன் யோசிப்பார்கள். அலசிப் பார்ப்பார்கள்; இதன் அடிப்படையில் மற்ற அவரது பிற செயல்களையும் கருத்தில் கொண்டு, உள்ளபடியே வாழ்க்கையில் தாம் ஏதாவது சாதித்தோமா அல்லது குறைகளில் நிறைகளைக் கண்டு, நிறைவுடன் மகிழ்ச்சியுமாக வாழ்ந்தோமா என்பதையும் நிச்சயமாக ஒருவர் கணிப்பார் என்பது என் உறுதியான கருத்து!

ஆனந்தராம்

எழுதியவர் : ramasubramanian (15-Jun-21, 9:43 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 46

மேலே