தந்தையர் தினம்

தந்தையர் தினம்

அப்பா என்னும் அறிவு பெட்டகம்
அள்ளக் குறையாத அரிய பொக்கிஷம்
ஆசைகள் நிறைந்த அழகிய புத்தகம்
ஆவலோடு படித்திட இனிமை பொங்கிடும்
இன்பங்களை தரும் இனிய படிப்பகம்
ஈடு இணையற்ற உன்னத உருவகம்
உணர்ச்சிகளை அடக்கி வாழும் உயிரினம்
ஊமையாகி மனதில் நிறைந்திடும் உறவினம்
எதையும் தாங்கும் அருமையான இருதயம்
ஒருபொழுதும் தனக்கென்று வாழாத தனி இனம்
ஓய்வின்றி உழைத்திடும் அபூர்வ இயந்திரம்
இந்த அருமையான அன்பு வடிவத்தை
போற்றிப் புகழ்வோம் இந்நன்னாளிலே

எழுதியவர் : கே என் ராம் (15-Jun-21, 10:17 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : thantaiyar thinam
பார்வை : 20

மேலே