The Common Sense” ஜூன் 2021 மாத இதழுக்கு எழுதிய தலையங்கம்

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் – அமெரிக்கா அமைப்பின் “The Common Sense” மாத இதழின் வாசகர்களுக்கு அன்பு வணக்கம். அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியாரின் கருத்துக்களை அமெரிக்காவாழ் தமிழர்களிடம் தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்கும், அமைப்பின் சார்பாக வெளிவரும் இந்த மாத இதழுக்கும் நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் அன்பிற்கும், ஆதரவுக்கும் நன்றி !

முத்தமிழ் அறிஞர், ஐந்து முறை தமிழ்நாட்டை ஆட்சி புரிந்தவர்,சமூகநீதி காவலர் கலைஞர் அவர்களின் 97 வது பிறந்தநாள் சிறப்பு இதழாக இந்த மாத :The common Sense “ வெளிவருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

பாரம்பரியம் ,கலாச்சாரம் ஒழுக்கம் , கல்வித்தரம் ஆகியவற்றில் நாங்கள்தான் முன்னோடி என்று கட்டமைக்கப்பட்ட சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் பல ஆண்டுகளாக மாணவிகள், அந்தப் பள்ளியின் ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு இரையான அதிர்ச்சியான செயல்கள் வெளிவந்துள்ளது .

துறை ரீதியான விசாரணை தொடங்கும் போதே , பாதிப்பு அடைந்தவர்களுக்கு எந்த ஆறுதலும் கூறாமல் , அவர்களின் துணை நிற்காமல் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை சென்று இருப்பது , மாணவிகளை சீரழிக்கும் இந்த பள்ளிகள் தேவையா என்று மக்களிடத்தில் கேள்விகளை எழுப்புகிறது . தமிழக அரசு இதன் முழு பின்னணியையும் விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் வலியுறுத்துகின்றது .


தமிழ்நாட்டு அரசின் கொரோன பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் , தொடர்ந்து வரும் சமூகநீதி திட்டங்களுக்கான அறிவிப்புகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஓங்கி ஒலிக்கும் மாநில உரிமை குரல்களும் கலைஞர் ஆட்சி தமிழ்நாட்டில் தொடர்வதை உறுதிசெய்கின்றது.


பெரியாரும் அண்ணலும் வகுத்துக்கொடுத்த பாதையில் நேர்மையாகவும் , வெளிப்படையாகவும் , தன்னாட்சியுடனும் தொடர்ந்து செயற்பட தங்களின் மேலான ஆதரவையும் ஊக்கத்தையும்
வழங்கிடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம் . தங்கள் படைப்புகள் , கருத்துக்கள் , விமர்சனங்கள் , விளம்பரங்களை 'thecommonsense மின்னஞ்சல் வாயிலாக பகிர்ந்துகொண்டால் மேலும் ஊக்கம் பெறுவோம் .



வாழ்க தந்தை ! வாழ்க அண்ணல் !

வளர்க பகுத்தறிவு ! செழிக்க மனிதநேயம் !

நன்றி

ஆசிரியர் குழு

எழுதியவர் : பாவி (15-Jun-21, 10:49 pm)
சேர்த்தது : பாவி
பார்வை : 68

மேலே