அன்றும் இன்றும்

இயற்கையைப்
பார்த்தே...
பருவத்தைக் கணித்தான்
அன்று ...

கைபேசியைப் பார்த்து
பருவம் கணிக்கிறான்
இன்று.

பருவம் தப்பாது
காற்றும், மழையும்
அன்று ...

பல ஊர் தப்பியே
காற்றும், மழையும்
இன்று...

எங்கோ பூத்த
மலர்களின் மணத்தை
சுமந்து வந்தது
அன்றைய காற்று...

எங்கோ எரியும்
புகையைச் சுமந்து
நாறியது இன்று ....

அன்று
காற்றுக்குள்...
உயிர் வளி
மிகுந்திருந்தது...
இன்றோ
உயர்ந்த வலியோடு
வளியும் பிரிந்திருக்கிறது...

அன்று ...
தம்மைத் தொட்ட
காற்றைக் .... "காத்து "
என்றனர்... மக்கள் ...

இன்று ...
அடைத்திருக்கும்
வீட்டினுள் இருந்து கொண்டு ...
"காட்டு" என்கிறோம்.

ஒன்று மற்றும்
புரிந்துகொண்டோம்...
உடலில்
காற்று இருந்தால் தான்
ஓட்டமும்... சாட்டமும்...
அது நின்றுவிட்டால் ...
ஜடமே.

மரு.ப. ஆதம் சேக் அலி
களக்காடு.

எழுதியவர் : PASALI (16-Jun-21, 5:59 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 134

மேலே