ஆவாரம்பூ

தகதகவென மின்னும்
தங்க நிற மலரே
கரிசல் காட்டில் மலர்பவளே
தை மாதம் பூப்பவளே!
தைப்பொங்கலில் பூளைப்பூவோடு
கூரைப்பூவை அலங்கரிப்பவளே
மேனி எழிலுக்கு உதவுபவளே
சமூலம் அது உன்னில் உருவாகும்
நீரழிவுக்கு மருந்தாகும்
சித்திரை வெயிலின் தாக்கம் உன்
இலையின் குளிர்ச்சியில் நீங்க
நித்திரை சுகமாய் வருமே!

எழுதியவர் : ஜோதிமோகன் (16-Jun-21, 9:01 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
பார்வை : 69

மேலே