தினமும் எதோ ஒரு தினம்

அனைவரும் இறைவனின் தயவில் உயிர் வாழ்வதால், என்றென்றும் இறைவன் தினம்!

ஒருவர் வேலை கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் என்பதால், முதலாளிகள் தினம்!

தொழிலாளர்கள் இல்லையெனில் உற்பத்தி இல்லை என்பதால் தொழிலாளர்கள் தினம்!

தொழிலாளரும் உழைத்தால்தான் ஊதியம் என்பதால், நாளும் உழைப்பாளிகள் தினம்!

மனைவி சாப்பாடு கொடுத்தால்தான் கணவன் வேலை செய்ய முடியும், எனவே ஓவ்வொரு நாளும் மனைவிகளின் தினம்!

கணவன் இன்றி மனைவி குடும்பத்தை நிர்வாகம் செய்ய இயலாது என்பதால், தவறாமல் தொடரும் கணவர்கள் தினம்!

அம்மாவின்றி அப்பாவுக்கு சிறப்பு இல்லை, அப்பாவின்றி அம்மாக்கு பெருமை இல்லை!
எனவே நாளொரு மேனி, பொழுதும் ஒரு வண்ணம் என்பது போல், விமரிசையாக பொழுதும் நடைபெறும் அம்மா-அப்பா தினம்

எது எப்படி இருப்பினும் ஒருவருக்கு மற்றவர் உதவி செய்தால் தான் வாழ்க்கை நடக்கும், இதை உணர்த்தும், பிழைப்பாளிகள் தினம்!

இருப்பினும் சில முதலாளிகளுக்கு அதிக மண்டை கனம்! சில தொழிலாளிகளுக்கு தொண்டை கனம்! கனம் பொருந்திய இவர்களிடம் பழகும் போது,தேவை க(வ)னம்!

வாழ்க, (வேலை செய்யும்) தொலாளிகள்
வளர்க, சம்பளம் கொடுக்கும் முதலாளிகள்!
ஓங்குக இடையில் உள்ள இவர் கூட்டாளிகள்!
ஓழிக, பணத்தை சுரண்டும் பெருச்சாளிகள்!
மறைய, நம்மை பயமுறுத்தும் பூச்சாண்டிகள்!

பிழைப்புக்காக உழைப்பைக் கொடுத்து, தன் கொழுப்பை குறைக்கும் தொழிலாளர்கள்
பிழைத்து, அவர்களுக்கு செல்வங்கள் அனைத்தும் தழைத்திட வாழ்த்துக்கள்!

ஊதியம் கொடுக்கும் முதலாளிகள், அதிகம் ஊதியும் போகாமல், சமூகத்திற்கு நல்ல நீதியும், சேதியும் கொடுக்க வாழ்த்துக்கள்!

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (16-Jun-21, 10:56 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 23

மேலே