மிருகங்கள் கொடுக்கும் பாடம்

அணில் குட்டியைப் பாருங்க! எவ்வளவு சுறுசுறுப்பா ஆர்வமா இருக்கு! ஏன், அது போல நாமும் துருதுருன்னு, சோம்பல் இல்லாம, இருக்கக்கூடாதா? மூணு நாமத்தை மட்டும் மத்தவங்களுக்கு போடாதீங்க!

ஆடி வரும் யானையைப் பாருங்க, எவ்வளவு தெளிவாக, நிதானமாக, கூர்ந்து கவனித்து வாழ்கிறது. ஏன், யானையைப் போல பொறுமை நிறைந்து, விழிப்புடன் வாழ நாமும் கற்றுக் கொள்ளக் கூடாது? ஆனா, அது மாதிரி சாப்பிடாதீங்க ப்ளீஸ்!!!

இருட்டிலும் தெளிவுடன் பாலைத் தேடும் பூனையப் பாருங்க. ஏன், நாம் கூட இதைப் போல மென்மையா, சுத்தமுடன், தீர்கமான பார்வையுடன் வாழக் கூடாது? ஆனா, மியாவ் மியாவ்னு சத்தம் பண்ணாம!

ஈன்னு எப்பவும் எஜமானை(னியை)ப் பார்த்து இளிக்கும் நாயைப் பாருங்க. நன்றியறிவை தண்டோரா போட்டு சொல்வதை ஏன் இந்த நாய்களிடமிருந்து பின்பற்றக் கூடாது? ஆனா, வாலை மட்டும் ஆட்டவேண்டாம். இருந்தாத்தானே!

உர்ருன்னு மூஞ்சு இருந்தாலும், சர்ரு, சர்ருன்னு மரம் விட்டு மரம் தாவி களித்திடும் நம் தூரத்து உறவு, குரங்கு பெருமான். இதை பார்த்து, ஏங்க, நாமும் சுறுசுறுன்னு, நம் வேலைகளை உடனுக்குடன் கவனிக்கக் கூடாது? வீட்டுக்கு வீடு தாவுவதை மட்டும் தவிர்த்துடுங்க!

ஊசி மாதிரி மூஞ்சியை வச்சிண்டு, இந்த சிட்டுக் குருவிகள் எவ்வளவு அழகாக அதன் கூட்டை கட்டி, அதில் முட்டை இடுகிறது? நாமும் அதைப்போல மனதை அன்பாலும் பண்பாலும் கட்டி, முட்டை இடுவதற்கு பதில் சுமை என்கிற மூட்டைகளை பொரிச்சு வெளியே தள்ளி விட்டுடலாமே! ஆனால், குருவி மாதிரி முகத்தை வச்சிக்க தேவையில்லை!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (16-Jun-21, 12:54 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 71

மேலே