படகின் காதல்

பலரைச் சுமக்கும் படகிற்கு ....
தன்னைச் சுமக்கும்
ஆற்றின் மேல்...காதல்.

தன் மேல் ஓடும்
படகின் முகத்தை
ஆறோ ...
ஒரு நாளும்
பார்த்ததில்லை...

தன் அடியைத்
தொட்டுச் செல்லும்
ஆற்றின் முகத்தையும்
படகோ ....
ஒரு நாளும் பார்த்ததில்லை.

பாரம் தாங்காமல்
ஒரு நாள் படகு
தத்தளித்த போதுதான்
இரண்டும்...முகங்களால்
சந்தித்தன.

அன்று ...
ஊரே அழுதது.

சில நேரங்களில்
இப்படித்தான் ...
சந்திக்காத இரண்டு
காதலர்கள் சந்தித்தால் ...
ஊரே அழவேண்டி
இருக்கும்.

எழுதியவர் : PASALI (17-Jun-21, 5:50 am)
சேர்த்தது : PASALI
Tanglish : padagin kaadhal
பார்வை : 38

மேலே